உங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு!

இயேசுவே ஒளியானவர், ஆனால் இந்த உலகம் அவரை வரவேற்கவில்லை என்ற கூறும் வல்லமையுள்ள வசனத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்… இதன் பின்னரே, வேதம் இவ்வாறு சொல்கிறது, “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12)

இந்த வசனம் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது.

“…அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்…” இந்த வார்த்தைகள் என்னை ஆழமாக தொடுகின்றது, ஏன்னென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவர் உங்களை அவருடடைய பிள்ளையாக மாற்ற விரும்புகிறார். ஆண்டவர் உங்களை மிகவும் நேசிக்கிறார், உங்களை பராமரிக்க விரும்புகிறார்…ஆம், உங்களைத்தான்! மேலும் தேவனுடைய பிள்ளையாகும்படி, உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறார்.

நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தைக் காண விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஆண்டவரின் பிள்ளையாக மாறுவதற்கான உரிமை உங்களுடையது!

இந்த வசனத்தில், “உரிமை” என்கின்ற வார்த்தை கிரேக்கத்தில் “எக்ஸுசியா”, இதற்கு வல்லமை, அதிகாரம், கனம், செல்வாக்கு, உரிமை என்று பொருள். ரோமர் 8:17ல் எழுதியிருப்பதன்படி,  ஆண்டவருடைய பிள்ளையாவதற்கும், அவருடைய வாரிசு என்று அழைக்கப்படுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. ஒரு வாரிசு இயல்பாக பெறும் பரம்பரை மற்றும் சொத்துக்கள் (பிரதேசங்கள்) போன்ற அனைத்தும் உங்களுக்கு உண்டு. இப்படி நீங்கள் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் ஆண்டவருக்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆம், சர்வவல்லவரின் மகளாக, மகனாக உங்களுக்கு உரிமை உள்ளது!

இன்று, நீங்கள் அவருடைய அன்பான பிள்ளையை போல வாழுங்கள்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!