இயேசுவின் அன்பு உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது 😁😁

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவின் அன்பு உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது 😁😁

சங்கீதம் 94:18-19-ஐப் பற்றிய நமது தியானத்தை நாம் தொடர்வோம். ஆண்டவர் உனக்குக் கொடுக்க விரும்பும் மகிழ்ச்சியைப் பற்றி நாம் இன்று பார்ப்போம்.

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:18-19)

கர்த்தாவே, உமது கிருபை”… என்ற பதத்தை தியானிப்போம். ஆண்டவர் எப்போதும் உன் மீது கிருபையாய் இருக்கிறார். நீ பிறப்பதற்கு முன்பே, ஆண்டவர் உன்னை நேசித்தார், உனக்காக ஏற்கனவே மிகப்பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று அவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. (ரோமர் 5:8)

ஆண்டவர் உன்னை நேசிக்கிறார். அவர் தமது அன்பிற்கு அடையாளமாக ஒரு ஆச்சரியக்குறியை வைத்தார். அது எல்லாக் கேள்விக்குறிகளையும் எதிர்கொள்ளும் ஒரு ஆச்சரியக்குறி. சிலுவைச் சின்னம்தான் ஒரு தெய்வீக ஆச்சரியக்குறியாகும்!

  • உன் உறவுகளைக் குறித்த உன் கவலைகளில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன்னை தமது கைகளில் ஏந்திக்கொள்கிறார்.
  • உன் பொருளாதாரக் கவலைகளுக்கு மத்தியில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன் தேவைகளை சந்திக்கிறார்.
  • உன் சரீரத்தைக் குறித்த கவலைகளின் மத்தியிலும் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார், உன்னை உயர்த்துகிறார்.
  • உன் குடும்பத்தைப் பற்றிய கவலைகளில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன் அன்புக்குரியவர்களை கவனித்துக்கொள்கிறார்.
  • அவரது அன்பு உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது அன்பின் கரங்களுக்குள் நீ வந்துவிடு.

ஆண்டவருடைய மாறாத அன்பிற்காக என்னுடன் சேர்ந்து அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறாயா? “ஆண்டவரே, என்னால் எப்படி உம்மைத் துதிக்காமல் இருக்க முடியும்? இயேசுவே, நான் எப்படி உம்மை ஆராதிக்காமல் இருக்க முடியும்? நீர் அற்புதமானவர், உமது அன்பும் கூட அற்புதமானது. நான் கவலையில் மூழ்கிவிடும்போது, ​​​​உமது அன்பு எனக்கு ஆதரவாக இருக்கிறது. எல்லாமே என்னைச் சுற்றி நொறுங்குவதுபோல் தோன்றும்போது, ​​​​உமது விசுவாசத்தில் நான் நிற்கிறேன். இயேசுவே, உமது அன்பிற்கு நன்றி கூறுகிறேன். ஆம், உமது அன்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இன்று காலையில் எனக்குக் கிடைத்த உங்களது மின்னஞ்சல் செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. என் வாழ்க்கையில் நான் செய்த காரியங்களுக்காக நான் மிகவும் வெட்கப்பட்டேன், ஆண்டவர் என்னை நேசிக்கிறார் என்பதை அறிந்திருந்தும், நான் அந்த விஷயங்களைச் செய்ததை எண்ணி வருந்துகிறேன், மேலும் தினமும் காலையில் உங்கள் செய்திகளை எனக்கு அனுப்புவதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் உயிருடன் இருப்பதற்கு யாரோ ஒருவர் அக்கறை காட்டுகிறார் என்பதை நினைக்கையில், நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன். நீங்களும் எனக்காக இருப்பதை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமையட்டும்.” (ஜாய்ஸ்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!