இன்று காலை எழுந்ததும் உன் மனதில் உதித்த முதல் சிந்தனை என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று காலை எழுந்ததும் உன் மனதில் உதித்த முதல் சிந்தனை என்ன?

காலையில் எழுந்தவுடன் உன் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன? உனக்கு முன்னால் இருக்கும் புதிய நாளை நினைத்து நீ மகிழ்ச்சியடைகிறாயா? படுக்கையிலிருந்து எழுந்து, “கர்த்தாவே காலைதோறும் உமது இரக்கங்கள் புதியன… உமக்கே மகிமை உண்டாவதாக! நான் என் சத்துருக்கள் அனைவரின் மீதும் ஜெயம் பெறுவேன்!” என்று சொல்லுகிறாயா?

அல்லது “இந்த நாள் மிகவும் கடினமாக இருக்கும், இந்நாள் ஏற்கனவே முடிந்திருந்தால் எனக்கு நலமாயிருந்திருக்கும்!” என்ற எண்ணங்கள் உனக்குள் உருவாகுகிறதா? கவலை என்பது உன் இதயத்தில் எழும் அலையைப் போலவும், அந்த அலை மிகவும் வலுவாகவும் உயரமாகவும் இருந்தால் அது உன்னை முழுவதுமாக விழுங்கிவிடும் என்பதாகவும் நினைக்கிறாயா? அதற்கு எதிராக நின்று மீண்டுவர வாய்ப்பே இல்லை என்பதுபோலத் தோன்றுகிறதா?

இந்த எண்ணங்கள் உன்னை மூழ்கடிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். எரேமியா 1:8 கூறுகிறது: “நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.” (பரிசுத்த வேதாகமம்)

உன்னைப் பயமுறுத்தும் “காரியங்கள்” பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் “நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னைக் காப்பாற்றுவேன்” என்று சொல்லும் தேவனை நான் அறிவேன். கவலை உன் இருதயத்தின் கதவைத் தட்டும்போது, உனது ஆண்டவர் எல்லா கவலைகளையும் விட பெரியவர் என்று உறுதியாகச் சொல், ஏனென்றால் அவர் சகல ஜீவன்களின் சமாதானத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணராக இருக்கிறார். இந்த தேவன் உன்னுள் வாழ்கிறார் என்று மற்றவர்களுக்கு அறிவி!

இப்போது நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம், “ஆண்டவரே, என் கவலைகளைவிட நீர் பெரியவர். நான் இப்போது இருக்கும் சூழ்நிலையின் விவரங்கள் உமக்குத் தெரியும். எந்த ஒரு மனிதனை விடவும், எந்த ஒரு மருத்துவரைக் காட்டிலும் என் இருதயத்தின் நிலையை நீர் நன்கு அறிவீர். மற்றவர்களை விட நீரே என்னைக் காத்து என் பயத்திலிருந்து என்னைக் காப்பாற்ற முடியும். என்னுள் பெருகி வரும் உமது ஜீவனுக்காகவும், நான் இப்போது பெறும் சமாதானத்துக்காகவும் நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!