இன்னும் சிறிது நேரம் காத்திரு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்னும் சிறிது நேரம் காத்திரு!

பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… நீ பொறுமையாக இருப்பாயா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு இது மிகவும் சவாலான ஒரு காரியம்தான்!

ஒருமுறை எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “தோற்பதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று பொறுமை இல்லாமை, அதுவும் ஜெபத்தில் பொறுமை இல்லாமற்போவதுதான்; நாம் ஜெபத்தில் அதிகமாகக் காத்திருப்பதில்லை. காரியங்கள் துரிதமாக நடக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் தேவனோ நாம் நன்றாகக் காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.”

இன்று இந்த ஜெப பயணத்தை நீ விட்டுவிடாதே என்று உன்னை நான் ஊக்குவிக்கிறேன், தொடர்ந்து முன்னேறிச் செல், இறுதி வரை முன்னேறிச் செல்!

நீ ஒரு பதிலுக்காகக் காத்திருக்கிறாயா? அந்தப் பதில் இன்னும் கிடைக்கவில்லையா? தொடர்ந்து தேவனிடத்தில் காத்திரு.

தொடர்ந்து ஜெபி, ஜெபத்தை விட்டுவிடாதே. சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துவதற்காக, இயேசு தமது சீஷர்களிடம் உவமையாகச் சொன்ன இப்பெண்ணின் கதையில் நாம் பார்ப்பதைப்போல தொடர்ந்து ஜெபி. (பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 18:1‭-‬8ஐ வாசிக்கவும்)

தேவன் உன்னை மறந்துவிடவில்லை. உனக்காக அவர் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். தேவனுடைய பரிபூரணமான சித்தம் உன் வாழ்க்கையில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது!

நீயும் நானும் ஜெபத்தில் பொறுமையாக இருந்து தொடர்ந்து போராடினால் எப்படி இருக்கும்? நமக்கு நேரிடும் எல்லா சோதனைகளையும் தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து வெற்றி பெற்றால் எப்படி இருக்கும் என சற்று கற்பனை செய்து பார்… இன்னும் சற்று நேரம் காத்திருப்பது நல்லது தானே, இல்லையா?

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் தினதியானங்களை நான் கண்டடைந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்! தொடர்ச்சியான ஜெபத்திற்குப் பிறகு நான் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து உபவாசிக்க முடிவு செய்து, இந்த நாளைத் துவங்கினேன். நான் ஒரு குறிப்பிட்ட முறையில் ஜெபித்து, தேவனிடம் சில குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி விண்ணப்பித்து, சில வசனங்களை அறிக்கையிட்டு, பின் மின்னஞ்சலைத் திறந்தபொழுது, அதே வசனமும், அதே வார்த்தையும், அதே ஜெபமும் அங்கே இருந்தது, இது மிகவும் ஆச்சரியமான காரியமாகும்! இதை தேவனால் மட்டுமே செய்ய முடியும்.

இந்த ஊழியத்தைச் செய்வதற்காக நீங்கள் செலவிடும், உங்கள் நேரத்திற்காகவும், பெலனிற்காகவும், கவனத்திற்காகவும், தியானத்திற்காகவும், மற்றவர்களை நேசிக்கும் அன்பிற்காகவும், ஜெபத்திற்காகவும் மனதார நன்றி செலுத்துகிறேன்!

நம்பிக்கையூட்டி, வாழ்வளிக்கும் இந்தச் செய்திகளுக்கான ஆசீர்வாத அறுவடையை நீங்கள் நிச்சயமாய் பெறுவீர்கள். அநேகருக்கு மிக அதிகமாகத் தேவைப்படும் இந்த ஊழியத்தை தேவன் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக!” (லலிதா)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!