ஆண்டவர் உனக்கு நல்ல ஆண்டவராகவே இருக்கிறார்! 💛

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்கு நல்ல ஆண்டவராகவே இருக்கிறார்! 💛

சிலர் நினைப்பதுபோல் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த ஆண்டவர், கொடூரமானவரும், புரிந்துகொள்ள முடியாதவருமான ஒரு தகப்பன் அல்ல. மாறாக, உன்னைச் சிருஷ்டித்து, உன்னை நேசிக்கும் ஆண்டவராகிய இவர், உனக்குத் தீங்கு செய்யாமல், உன்னைச் செழிப்புறச் செய்வதற்கான திட்டங்களை வைத்திருக்கும் நல்ல ஆண்டவராய் இருக்கிறார்.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பல வசனங்கள் ஆண்டவரின் நன்மை, இரக்கம் மற்றும் தயவைப் பற்றி நமக்குச் சொல்லுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்:

  • “கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.” (சங்கீதம் 36:5)
  • “… உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.” (சங்கீதம் 40:11)

நீ செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் நீ இரட்சிப்படையாமல், அவரது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நீ இரட்சிக்கப்படலாம். (தீத்து 3:5)

இன்று, உன் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யவும், உன்னை குணமாக்கவும், நெருக்கத்திலிருந்து விடுவிக்கவும், நம்பிக்கை அளிக்கவும், குடும்பத்தை மீட்டெடுக்கவும் விரும்பும் ஆண்டவரின் மீதும் அவரது நன்மைகள் மீதும் நீ உன் நம்பிக்கையை வைக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

திருடன் (பிசாசு) திருடவும் (ஆரோக்கியத்தை), கொல்லவும், மற்றும் அழிக்கவும் வருகிறான்; ஆனால் நமக்கு ஜீவன் உண்டாகவும், அந்த ஜீவன் பரிபூரணமடையவும் இயேசு வந்தார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. இன்று, இயேசு கிரியை செய்யப்போகிறார் என்றும், சத்துரு உன்னிடமிருந்து திருடியதை நீ திரும்பப் பெறப்போகிறாய் என்றும் நம்பு…

சங்கீதம் 85:7ல் சொல்லப்பட்டதை உரிமைகோரி ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்: “கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும் – உமது சுகப்படுத்துதல் மற்றும் உமது விடுதலை அருளிச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

உனக்காகத் தனியாய் ஏறெடுக்கப்படும் ஜெபம் இதோ: “கர்த்தாவே, உமது கிருபையை இவருக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை இவருக்கு அருளிச்செய்யும் – உமது சுகப்படுத்துதல் மற்றும் உமது விடுதலையை அருளிச்செய்யும்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் சமீபத்தில் ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தேன், விசுவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் ஆண்டவர் என்னை அந்த நோயிலிருந்து விடுவித்தார். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்னுடைய விசுவாசத்தைப் பெருகப்பண்ணவும், ஆண்டவருடைய அன்பு நம்மீது எவ்வளவு பூரணமானது என்பதை அறியவும் உதவியது. அவரது திட்டம் எப்போதும் பூரணமானது மற்றும் சரியான நேரத்தில் நிறைவேறும். சில சமயங்களில் எனக்குத் தெரியும், என்னைப் பொறுத்தவரை, நமது பாடுகள் அவர் மீது நம் கவனத்தைத் திருப்புவதற்கே ஆகும், மாறாக துன்பத்தை அனுபவிப்பதற்கு அல்ல. எரிக், உங்களுக்காகவும் மற்றும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ ஊழியத்திற்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்; ஏனென்றால் என் வாழ்க்கை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.” (லிசா, சூரத்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!