ஆண்டவர் உன்னைத் தரையில் விழ விட்டுவிடமாட்டார்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:18-19)
“என் கால் சறுக்குகிறது.” கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு நடை, நாம் சில சமயங்களில் தடுமாறலாம். விழுந்தும்விடலாம்.
எந்தெந்தப் பகுதிகளில் நீ எளிதில் விழுந்துவிட வாய்ப்புள்ளது?
- பெருந்தீணியா?
- புறணி பேசுதலா?
- அதிகப்படியான பணத்தை செலவு செய்தலா?
- கோபப்படுதலா?
- பாலியல் சீர்கேடா?
- போதைக்கு அடிமையாகுதலா?
நீ இந்தப் பகுதிகளை ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவர் உன்னை நாளுக்கு நாள் மாற்றவும், பலப்படுத்தவும், உயர்த்தவும் அவருக்கு இடங்கொடு.
நாம் புதிய விசுவாசிகளாக இருந்தாலும் சரி அல்லது விசுவாசத்தில் நன்கு வேரூன்றியவர்களாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் விழக்கூடிய அபாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் வேதாகமம் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12)
ஆனால் நற்செய்தி என்னவெனில், “அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” என்று சங்கீதப் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. (சங்கீதம் 37:24) நீ விழுவதைக் கண்டு ஆண்டவர் அதிர்ச்சியடைவதில்லை, மேலும் உன்னை உயர்த்துவதற்கு, நாளுக்கு நாள் தோல்வியிலிருந்து மீண்டுவர, அவர் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார்.
ஒருவேளை நாம் மீண்டும் விழலாம், ஆனால் நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டால், ஆண்டவர் நம்மை அதே இடத்தில் விடமாட்டார். சேற்றில் விழுந்த வைரம் அதன் மதிப்பை ஒருபோதும் இழக்காது.
“ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.” (யோபு 5:19) ஆம், ஆண்டவர் உன்னை உயர்த்தி, முன்னேறிச் செல்வதற்கான மகிழ்ச்சியையும் வலிமையையும் தர விரும்புகிறார்.
இன்று, “என் கால் சறுக்குகிறது” “நான் விழப் போகிறேன்” என்று சொல்லாதே, ஒருபோதும் அப்படிச் சொல்லாதே; அதற்குப் பதிலாக, “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது” என்று சொல்லி அறிக்கையிடு (சங்கீதம் 91:7)
ஆண்டவரின் கிருபை இன்று உனக்கு உண்டாவதாக!