ஆண்டவர் உனக்குப் பலனளிக்கிறார்! 💫

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்குப் பலனளிக்கிறார்! 💫

நீ ஆண்டவரைப் பிரியப்படுத்த விரும்புகிறாயா? விசுவாசம் இல்லாமல் ஆண்டவரைப் பிரியப்படுத்த முடியாது என்று வேதாகமம் சொல்கிறது. எபிரெயர் 11ம் அத்தியாயம் வேதாகமத்தின் விசுவாச அத்தியாயம் என்று அழைக்கப்படுகிறது. அதை தியானிப்பது உன் விசுவாசத்தை மிகவும் பெருகச் செய்யும்!

ஒருவேளை உனக்குள் விசுவாசம் இருக்கிறதா என்று நீ இன்னும் சந்தேகப்படலாம்… ஆண்டவர் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? எபிரெயர் 11:6 இதை நமக்குச் சொல்கிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6)

  • ஆண்டவரை விசுவாசிப்பதுதான் முதல்படி. அதாவது, அவருடைய பிரசன்னத்தை, அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை மற்றும் பாவ மன்னிப்பை ‌விசுவாசிப்பதாகும். அது அவருடைய கிருபையின் மீது நம்பிக்கை வைப்பதாகும்.
  • ஆண்டவரை விசுவாசிப்பதே இரண்டாவது படி. இது அவருடைய வாக்குத்தத்தங்களையும், உன் வாழ்க்கைக்கான அவரது மிகச்சிறந்த திட்டங்களையும், அவர் உன் மீது வைத்திருக்கும் நிபந்தனையற்ற அன்பையும் விசுவாசிப்பதாகும். கண்களால் காண்பதற்கு முன்னரே ஒன்றை விசுவாசிப்பதாகும்.

இந்த முதற்படியிலிருந்து ஆண்டவரிடத்துக்கு நெருங்கி வரும்போது வாக்குத்தத்தம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, அவர் இருக்கிறார் என்று விசுவாசிக்கிற உனக்கான வாக்குத்தத்தம். உண்மையாய் தம்மைத் தேடுபவர்களுக்கு ஆண்டவர் பலனளிப்பார். “பலன்” என்ற இந்த வார்த்தைக்கு, கிரேக்க வேத எழுத்தின்படி, “கூலி கொடுப்பவர்” என்று அர்த்தமாகும். ஆண்டவர் கிரியை செய்ய வேண்டுமானால், அவர் இருக்கிறார் என்று விசுவாசித்தால் போதுமானது, ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!

இன்று உன் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேட நான் உன்னை அழைக்கிறேன். (எரேமியா 29:11) ஆண்டவர் உன்னால் கண்டுபிடிக்கப்பட விரும்புகிறார்.

ஆண்டவரை விசுவாசிப்பதால், நான் ஆண்டவரை மட்டுமே நம்புவதால், அவரை உண்மையாகத் தேடும் உனக்கு அவர் பலனளிப்பார் என்று நான் அறிக்கையிடுகிறேன்! அவர் உன் கூலியைக் கொடுக்கப்போகிறார்! வரவிருக்கும் நாட்களில் (நீ இதுவரை விசுவாசிக்கவில்லை என்றால்), உன் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண இந்தத் திறவுகோள்களைப் பயன்படுத்தலாம். மேலும் அவை ஆண்டவருடனான உன் பயணத்தில் முன்னேற உனக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். நாம் சேர்ந்து விசுவாசிப்போம்!

இப்போதே என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன். “என் பிதாவாகிய தேவனே, என் விசுவாசத்தை தள்ளாடவிட்டதற்காய் என்னை மன்னிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆம், நீர் இருக்கிறீர் என்றும், நீர் எனக்குப் பலனளிப்பீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் நான் முழு மனதுடன் உம்மைத் தேடுகிறேன். என் அவிசுவாசத்திலிருந்து என்னை இரட்சியும்; என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். நான் உம்மை மிகவும் பிரியப்படுத்த விரும்புகிறேன் என்பது உமக்குத் தெரியும்! என் வாழ்வில் எழுந்தருளும் சர்வவல்லமையுள்ள தேவன் நீரே என்று அறிக்கையிடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!