ஆண்டவர் இன்னும் உன்னை நேசித்துக்கொண்டிருக்கிறார்! 💛

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் இன்னும் உன்னை நேசித்துக்கொண்டிருக்கிறார்! 💛

சில நேரங்களில், சூழ்நிலைகள் ஆண்டவர் மீதான நமது அன்பை சந்தேகிக்க வைக்கலாம்: எதிர்பாராத வேலை நீக்கம், பொது விமர்சனம், தொடர்ச்சியான பாவம், ஓயாத ஏமாற்றம், வியாதி, விபத்து போன்ற சூழ்நிலைகள் நமக்குள் சந்தேகத்தைப் பெருகச் செய்யக் கூடும்.

“இது எனக்கு நடக்கிறது என்றால், நான் அதற்குத் தகுதியான நபராக இருக்கிறேன்; ஒருவேளை ஆண்டவர் என்னை நேசிக்காததால் இப்படி நடக்கலாம்” என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். இதில் எதுவும் உண்மை இல்லை. நீ எப்போதாவது அப்படி நினைக்க ஆரம்பித்தால், அந்தப் பொய்களை உடனடியாக நிராகரித்துவிடு.

ஏனென்றால், ஆண்டவர் உன்னை நேசிக்கிறார். மேலும் இந்த வல்லமை வாய்ந்த உண்மையை அசைக்கக்கூடிய எந்த சூழ்நிலையும் இல்லை என்பதை இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:38-39)

இதை நீ விசுவாசி: உன் மீதான அவருடைய அன்பிலிருந்து எதுவும், எப்போதும் உன்னைப் பிரிக்க முடியாது! உன் செயல்கள் எப்படி இருந்தாலும் சரி, உன் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, ஆண்டவர் உன்னை மீண்டும் மீண்டும் நேசிக்கிறார். உன் பரலோகத் தகப்பன் உன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு எதுவும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அந்த அன்பிலிருந்து எதுவும் உன்னைப் பிரிக்க முடியாது:

  • உன் பயமோ
  • உன் சந்தேகமோ
  • உன் வியாதியோ
  • உன் மனைவி, நண்பர் அல்லது சக ஊழியரின் துரோகமோ
  • பொருளாதார நெருக்கடியோ
  • தேவனுடைய அன்பிலிருந்து எதுவும் உன்னைப் பிரிக்காது!

ஆண்டவர் உன் மீது வைத்திருக்கும் அன்பை, ஈடு இணையற்ற அந்த அன்பைத் தடுக்கும் திறன் எதற்குமே இல்லை என்பதை நீ உறுதியாக நம்பு. ஆண்டவர் எல்லையற்றவர், உன் மீதும் அதிக அன்பு வைத்துள்ளார்.

இன்று என்னுடன் சேர்ந்து ஜெபி, “என் இயேசுவே, என் மீது நீர் கொண்டுள்ள உமது அன்பு, சாந்தம் மற்றும் பொறுமையை எண்ணி போதுமான அளவிற்கு உமக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை. உமது அன்பை எதுவும் அழிக்க முடியாது. உம்மிடமிருந்து எதுவுமே என்னைப் பிரிக்காது என்பதை அறிவதில் எனக்கு எத்தனை மகிழ்ச்சி! எப்போதும் உம்முடன் நெருங்கி, உம் இதயத்திற்கு அருகில் இருக்க எனக்குக் கற்றுத்தாரும்… உமது குரலின் சத்தத்தை நான் கேட்கிறேன், என் ஒவ்வொரு அடியையும் நீர் வழிநடத்துவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!