அவர் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவர் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி…” (வேதாகமத்தில் சங்கீதம் 23:3ஐப் பார்க்கவும்)

ஒரு வசனத்தின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, பல்வேறு மொழி பெயர்ப்புகளை வாசிப்பது பலனுள்ளதாயிருக்கும்.

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி” என்பதன் சில மொழி பெயர்ப்புகள்:

“என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.” (TAERV பரிசுத்த வேதாகமம் இலகுத் தமிழ் மொழிபெயர்ப்பு)

புது வலிமை: உன் வாழ்க்கைப் போராட்டத்தினை போராடி வெல்ல கர்த்தர் புது வலிமையை தமது வலிமையைத் தருவாராக.

“அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.” (TCVIN இந்திய சமகால மொழிபெயர்ப்பு)

புத்துயிர்: கர்த்தர் தாமே உனது ஆவியை, ஆத்துமாவை புதிதாக்குவாராக.

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி” (TAOVBSI பரிசுத்த வேதாகமம்)

ஆத்துமாவைத் தேற்றி: கர்த்தரே நல்ல மேய்ப்பராய் இருந்து உன் காயங்களை ஆற்றித் தேற்றுவாராக. உன்னைத் தேற்றி மீண்டும் நிலைநிறுத்துவாராக.

ஆம், கர்த்தர் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்! இந்த நொடி அவர் உன் வாழ்வில் அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்.

ஆவியானவர் உனக்காக கிரியை செய்கிறார்: செயல் திறனைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில், மன அழுத்தத்தில் வாழ்ந்து போராடிக்கொண்டிருக்கும் உலகத்தில், தேவனைத் தேட எளிதில் மறந்துவிடுகிறோம். “நேரமே இல்லை!” ஆனால் இன்று நம்பிக்கையின் அடி ஒன்றை எடுத்து வை. அவசர உலகம் உன்னைப் பற்றிப் பிடிக்கும் முன் தேவ சமுகத்தில் மூச்சை இழுத்து விட்டு சற்றே இளைப்பாறிடு.

ஆவியானவர் உன்னை சந்திப்பார்.

“ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே”

என்ற இந்தப் பாடலைப் பாடி ஆண்டவரைத் துதியுங்கள்.

https://youtu.be/rLulLuDreG8

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது தின தியானங்களை வாசிக்கையில், தேவ சமூகத்தில் நேரம் செலவிடுவது எவ்வளவு நன்மையானது எவ்வளவு இனிமையானது என்பதை நான் நினைவுகூருகிறேன். வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது, அன்றாட உலகச் செய்திகள் பயங்கர குழப்பங்களை திணிக்கிறது. இதன் மத்தியில் தேவ வார்த்தையில் நான் நேரம் செலவிடுவதையும், வார்த்தையினால் நான் புத்துணர்ச்சி பெறுவதையும் மிகவும் வரவேற்கிறேன். பெரும்பாலும், என் வாழ்வில் அவசியமான நேரங்களில் உங்கள் தின தியானங்கள் மூலமாக தேவன் என்னோடு பேசி என்னை வழி நடத்துகிறார்.”
(லைலா, திருத்தணி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!