அக்கினி சூளையாக இருந்தாலும், சிறந்தவை வெளிப்படுத்தப்படும் 🔥
முகப்பு ›› அற்புதங்கள் ››
விசுவாசியாக இருந்தாலும் சரி, அவிசுவாசியாக இருந்தாலும் சரி, யாராலும் தப்பிக்க முடியாத பல சவால்களை வாழ்க்கை நமக்கு முன்வைக்கிறது. ஆனால் நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருக்கும்போது, அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. வேதாகமத்தில் இங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “… நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.” (ஏசாயா 43:2)
கலிபோர்னியா மாநிலம் சமீபத்தில் சந்தித்ததைப்போல, ஒரு இயற்கை காரணியான, நெருப்பு பொதுவாக மிகப்பெரிய அளவில் அழிக்கும் ஆற்றலாக இருப்பதால், மக்கள் அதை மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர்: துரதிர்ஷ்டவசமாக, முழு நகரமும் அந்த நெருப்பால் அழிக்கப்பட்டது.
ஆனால் கண்டுணர முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கும் மற்றொரு வேலையையும் அந்த நெருப்பு செய்கிறது: இது ஒரு குறிப்பிட்ட வகையான மரத்தின் விதைகளைப் பரப்புவதற்குப் பங்களிக்கிறது. இதற்கு உதாரணமாக, சில வகையான பைன் மரங்களை நாம் பார்க்கலாம். வெப்பத்தில் வெளிப்படும்போது, பைன் மரத்தின் கூம்புகள் வெடித்து, வானவெளியில் கடினமான, அடர்த்தியான உறைகளுக்குப் பின்னால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்த விதைகளைப் பரப்புகின்றன.
நீ அனுபவிக்கும் சோதனைகள் உன்னை சோகத்தில் மூழ்கடிக்கக் கூடும் என்பதைக் கர்த்தர் புரிந்துகொள்கிறார். உன் துக்கம் மற்றும் வலியை அவர் உணர்கிறார். உனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிறந்த ஒன்றை வெளியிட உன் வாழ்க்கையில் எந்த “வெப்பம்” பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் அறிவார்.
இப்போது உனக்கு ஒருசில நல்ல செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். சோதனை எனும் நெருப்பு உன்னை அழித்துவிடாது, ஏனென்றால்:
- உன்னை சுத்திகரிப்பது அவசியம். (ஏசாயா 48:10)
- அது உன்னை ஆண்டவருடைய பிரசன்னத்துக்கு நேராக உந்தித்தள்ளுகிறது. (சங்கீதம் 57)
- மற்றவர்களுக்கு உதவும்படி, உன்னை இன்னொரு நிலைக்கு உயர்த்த ஆண்டவர் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் இது. (2 கொரிந்தியர் 1:3-4)
நீ தனியாக இல்லை. தானியேலுடனும் அவனுடைய தோழர்களுடனும் இருந்ததைப்போலவே, ஆண்டவர் உன்னோடும் அக்கினி ஜுவாலையின் மத்தியில் இருக்கிறார். மேலும் உன்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சோதிக்கப்படுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். (1 கொரிந்தியர் 10:13) நீ அழிக்கப்பட மாட்டாய்… நிச்சயம் அழிக்கப்படமாய்! ஏனென்றால், நீ அன்பும், பலமும் மற்றும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறாய்.
நாம் சேர்ந்து ஜெபிப்போம்… “பிதாவே, நான் அனுபவிக்கும் சோதனைகளின் மத்தியில் என்னோடு இருந்ததற்கு நன்றி. நான் உம்மை விசுவாசிக்கிறேன்; நீர் அவைகள் மூலம் சிறந்ததை வெளியே கொண்டுவருவது மட்டுமல்லாமல், அவை உமது மகிமையைப் பிரகாசிக்கச் செய்யும். எப்போதும் எல்லாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக நடக்கச் செய்தமைக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
நீ அக்கினியின் ஊடாக நடக்கும்போது, ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் அசாதாரண வாழ்வுக்கு நேராக நீ வழிநடத்தப்படுகிறாய்!
இன்று அவருடைய பலத்தால் நிரப்பப்படு!