வெற்றி உனக்கே!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வெற்றி உனக்கே!

“வெற்றிக்காகப் போராடு” என்ற வாக்கியத்தைப் பற்றி நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா?

சில சமயங்களில் நாம் சில விஷயங்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது.

உனக்கும் எனக்கும் …

  • நோய்க்கு எதிரான போராட்டம்,
  • போதை பழக்கம் அல்லது வேறு ஏதாவது கெட்ட பழக்கத்திற்கு எதிரான போராட்டம்,
  • திருமணம் அல்லது உறவைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் போன்றவை உண்டு.

ஆகவே, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம், இயேசு கிறிஸ்துவின் பலத்தையும் வெற்றியையும் சார்ந்துகொண்டு வெற்றிக்காகத் தைரி்யமாகப் போராடுமாறு அடிக்கடி நம்மை நாமே அறிவுறுத்துகிறோம். ஆனால்… இயேசு ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார்!

அவர் தமது உயிர்த்தெழுதலின் மூலம் மரணத்தின் மீது மட்டுமல்லாமல் வியாதி, அடிமைத்தனம், சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சி ரீதியிலான துன்பம் ஆகியவற்றின் மீதும் கூட வெற்றி சிறந்தார்!

நீ வெற்றிக்காகப் போராடாமல் அதை உணர ஆரம்பித்துவிடு என்று சொல்லி உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு ஏற்கனவே உனக்காக விலைக்கிரயம் செலுத்தி வாங்கிவிட்ட அந்த நிலையான வெற்றியை இறுகப்பற்றிக்கொண்டு போராட வேண்டுமென்று நான் உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

இது முற்றிலும் மாறுபட்ட மனநிலையும் நிலைப்பாடுமாகும்… பெற்றுக்கொள்வதற்காகப் போராடி, தேவையில்லாமல் நீ சோர்ந்துபோவதற்குப் பதிலாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஏற்கனவே பெற்ற வெற்றியின் மீது விசுவாசம் வைக்குமாறு இயேசு உன்னை அழைக்கிறார்!

இந்த வெற்றி பலரது வாழ்வில் நடக்கும் அற்புதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நிர்மலாவின் சாட்சி இதற்கு ஒரு உதாரணம்!

“’விசுவாசம்: எனக்கு இருப்பதெல்லாம் இது மட்டும்தான்!’ என்ற மின்னஞ்சலை நீங்கள் எனக்கு அனுப்பியபோது எனக்கு ஒரு அதிசயம் நடந்தது. அன்று காலையில், இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட என் அண்ணி ரமாவுக்காக நான் ஜெபம் செய்தேன். அவளைக் காப்பாற்ற யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை… அவளைக் காப்பாற்றும் பரிகாரமும் எதுவுமே இல்லாதிருந்தது. ஆனால் என் தேவன் அவளைக் காப்பாற்றினார்! இன்று அவள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். வீட்டிற்குத் திரும்பிவந்துவிட்டாள். எல்லா மகிமையையும் நான் இயேசுவுக்கே செலுத்த விரும்புகிறேன்!”

உன் வெற்றி ஏற்கனவே உனக்குக் கிடைத்துவிட்டது… அதைப் பெற்றாயிற்று!

இன்று உன் போராட்டத்தின் மத்தியில், இயேசு சிலுவையில் உனக்காக சம்பாதித்த வெற்றியில் இளைப்பாறு.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!