விவரிக்க முடியாத அற்புதங்கள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› விவரிக்க முடியாத அற்புதங்கள்!

விவரிக்க முடியாத விஷயங்கள். நீ எப்போதாவது அப்படி விவரிக்க முடியாத விஷயங்களை அனுபவித்திருக்கிறாயா? நடக்கவே முடியாத ஒரு விஷயம் ஆனால் அது நடக்கிறது, என்பது போன்ற அற்புதம். என் வயதான தாத்தா இறப்பதற்கு சற்று முன்பு, பரபரப்பான மருத்துவமனை அறையில் அவரைச் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவருக்குக் கொஞ்சம் கூட காது கேட்காது. பொதுவாக, காதுகளில் இரண்டு செவித்திறன் கருவிகளை அணிந்திருந்தால்தான், அவரால் கொஞ்சமாகக் கேட்க முடியும். ஆனால் அப்போது, ஒரு பிஸியான அறையில் (20 பேர் மற்ற 5 பேரைப் பார்வையிட வந்திருந்தனர்), அவர் தனது காது கேட்கும் கருவிகளைப் பொருத்திக்கொள்ளாமல் இருந்தபோதிலும், எங்களால் இயல்பாக உரையாட முடிந்தது, நான் பேசின எல்லாவற்றையும் அவர் கேட்டார். நான் மிகவும் திகைத்துப் போனேன். அந்த நேரத்தில் ஆண்டவர் எனக்கு ஏதோ ஒரு காரியத்தைத் தெளிவுபடுத்த விரும்பினார் என்பதை நான் இன்னும் உறுதியாக நம்புகிறேன்.

யோவானின் பிறப்பும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு வயதானவர்களை இங்கு நாம் காண்கிறோம். அவர்களுக்கு அது சாத்தியமில்லை என்பது உண்மைதான். அவர்கள் வயதானவர்களாகவும் மலட்டுத்தன்மையுடனும் இருந்தனர். குழந்தை பிறந்ததும் மீண்டும் பெயர் சூட்டினார்கள். அது மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம். குறிப்பாக அந்த‌ நாட்களிலும் காலத்திலும் அது நடந்தது ஒரு அதிசயம். 9 மாதங்களுக்குப் பிறகு ஊமையாக இருந்த தந்தை திடீரென்று மீண்டும் பேசத் தொடங்குகிறார். அது நிச்சயம் விசேஷமான ஒரு நிகழ்வாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அங்கிருந்த மக்கள் வெகுவாகக் கவரப்பட்டனர். இந்த ஆண் குழந்தை மீது ஆண்டவர் தமது கவனத்தை வைத்திருந்தார்.‌ அதனால்தான் இவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. யோவான் இயேசுவின் தூதனாய் இருந்தார். என்ன நடக்கப்போகிறது என்பதை சகரியா ஏற்கனவே ஆண்டவரிடமிருந்து கேட்டு அறிந்திருந்தார். ஆதிமுதல் தேவன் வாக்களித்த இரட்சகர் வருகிறார் என்பதை தேவன்தாமே அவருக்குக் காட்டுகிறார்.

அதே வாக்குத்தத்தம் இப்போதும் நமக்கு உரைக்கப்படுகிறது. இந்த இரட்சகர் உனக்காகவும் வந்திருக்கிறார். மன அழுத்தம், கவலைகள், குற்ற உணர்வு, அவமானம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து உன்னை இரட்சிக்கும்படிக்கு உனக்காக வந்திருக்கிறார். இரட்சகராகிய இயேசு தேவனின் சார்பாக வந்திருக்கிறார். உனக்காக வந்திருக்கிறார். நீ அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும், இதுவரை நடந்த அதிசயங்களையும் இனிமேல் நடக்கவிருக்கிற அதிசயங்களையும் நீ விசுவாசிக்கவும் உன் அருகில் வந்திருக்கிறார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!