விட்டுவிடு… தேவன் இருக்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› விட்டுவிடு… தேவன் இருக்கிறார்

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;” என்று சங்கீதம் 46:10 நமக்குக் கூறுகிறது.

“அமர்ந்திரு” என்பதற்கான எபிரேய வார்த்தை “ரபா” என்பதாகும். நாம் அதை “நிதானமாய் இரு, விட்டுவிடு, அமைதியாக இரு” என்று மொழிபெயர்க்கலாம். மேலும் மிகப் பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமானால், “அதை விட்டுவிடு, நானே தேவனென்று அறிந்துகொள்” என்று சொல்லலாம்.

அதை விட்டுவிட்டு ஆண்டவரிடத்தில் நெருங்கி வா… “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், […] ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரேயர் 4:16) என்று வேதம் சொல்கிறது.

இது எஸ்தர் ராஜாத்தியின் கதையை எனக்கு நினைவூட்டுகிறது (நீ அதை எஸ்தர் புத்தகத்தில் வாசிக்கலாம்). ஒரு நாள், யூத ஜனங்கள் பொல்லாத ஆமானின் கைகளில் அழிவை எதிர்கொண்டபோது,​ எஸ்தர் ராஜாத்தி ஜெபிக்கவும், உபவாசிக்கவும் கர்த்தரைத் தேடவும் முடிவு செய்தாள். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவள் ராஜாவுக்கு முன்பாகச் சென்றாள், அவன் தன் செங்கோலை அவளுக்கு நேராக நீட்டினான்.

ராஜா அவளைப் பார்த்து, “எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்!” என்று சொன்னான் (வேதாகமத்தில் எஸ்தர் 5:3 ஐ வாசிக்கவும்)

கிருபையின் சிங்காசனத்திற்கு அருகில் நாம் தைரியமாக வருவதற்கான வாய்ப்பின் அழகான படம்தான் இது. இயேசுவின் பலியின் மூலமாகவும் இரத்தத்தின் மூலமாகவும் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு அருகில் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை நீ இலவசமாய்ப் பெற்றிருக்கிறாய். இது உன்னுடைய நற்கிரியைகளால் உண்டானது அல்ல… மாறாக, முற்றிலும் அவரால் மட்டுமே கிடைத்த ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கே வந்துவிடு… உன்னை பாரமாக நெருக்கிக்கொண்டிருப்பதையும், உன்னுடைய சுமைகளையும் ஆண்டவரிடம் கொண்டுவந்து இறக்கிவைத்துவிடு. இந்தச் சூழ்நிலையையும், இந்த வியாதியையும், இந்தக் கடினமான உறவையும் அவர் கையாளட்டும்…

இன்று, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார், “அமர்ந்திரு, விட்டுவிடு, அமைதியாக இரு… நானே தேவனென்று அறிந்துகொள். என்னிடத்தில், கூடாதது என்று எதுவுமில்லை. என்னால் எல்லாவற்றையும் மாற்ற முடியும், அனைத்தையும் மறுரூபப்படுத்த முடியும், ஏனென்றால், நான் சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறேன்.

இந்த நாள் ஆசீர்வாதமான நாளாக அமையட்டும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!