விட்டுவிடாதே…

முகப்பு ›› அற்புதங்கள் ›› விட்டுவிடாதே…

இன்று உனக்காக ஆண்டவர் ஒரு விசேஷித்த வார்த்தையை வைத்திருக்கிறார். மேலும் நீ தொடர்ந்து முன்னேறிச் செல்ல அது உன்னை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்! இதோ அந்த வார்த்தை:

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1கொரிந்தியர் 10:13)

நான் என் ஆவியை உனக்குள் வைத்திருக்கிறேன். ஞானமும், தைரியமும் பலமும் நிறைந்த ஆவியை உனக்குள் வைத்திருக்கிறேன்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்லும் அந்த சத்தத்தை நீ கேட்காதே. நீ தனியாக இருக்கிறாய், நீ எதற்கும் பயன்படமாட்டாய் என்று சொல்லும் அந்தக் குரலுக்கு நீ செவிசாய்க்காதே.

நான் உன்னைப் பார்க்கிறேன். நான் உன்னைப் பார்த்து உன் பெயர் சொல்லி அழைக்கிறேன்!

எழும்பு. என் கண்களைப் பார். நான் இங்கேதான் இருக்கிறேன். நான் இன்னும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறேன். எல்லாவற்றையும் நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உனக்கு அருகாமையில் இருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்.

உன்னைத் தடுமாற்றம் அடையச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலை என்னிடம் ஒப்படைத்துவிடு.

நான் உன்னை மீட்டுக்கொள்கிறேன். நானே உன்னை சுமந்து செல்கிறேன்.

என்னை நம்பு. “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.” (சங்கீதம் 32:8)

என்னைப் பற்றிக்கொள்! சோர்ந்துபோய் விட்டுவிடாதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!