விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பின்தொடரு
முகப்பு ›› அற்புதங்கள் ››
வேதாகமம் இயேசுவை “பிரகாசமுள்ளவர் மற்றும் விடிவெள்ளி நட்சத்திரம்” என்று குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 22:16 ஐப் பார்க்கவும்)
படகுகள் இருந்த காலத்திலிருந்தே, மாலுமிகள் நட்சத்திரங்களைக் கவனித்து, படகைத் திருப்ப வேண்டிய திசைக்கு நேராகத் திசைதிருப்பும் கட்டையைத் திருப்பி, தங்கள் பாதைகளைக் கண்டுபிடித்து பயணத்தைத் தொடர்ந்தனர். நட்சத்திரமானது இருளின் மத்தியில் வெளிச்சமாகவும், வழிகாட்டியாகவும், பயணிக்க வேண்டிய பாதையாகவும் விளங்குகிறது, அதனால் பயணிகள் தங்கள் வழியை இழந்து, வழிதவறிச் செல்ல மாட்டார்கள்.
நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று, மாலை நட்சத்திரமாகும் (மேய்ப்பனின் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது), அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்படுகிறது … முதலாவதாகத் தோன்றுகிறது, பொழுதுவிடிந்து வெளிச்சம் வரும் நேரத்தில் கடைசியாக மங்குகிறது, மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்களுடன் சேர்ந்து அது வழிநடந்து செல்கிறது.
நாம் இருளில் இருக்கும்போது, நாம் எங்கே இருக்கிறோம் என்பதும், எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும் என்பதும் நமக்குத் தெரியாது. நீ இருக்கும் சூழ்நிலையின் மத்தியில் குழப்பமடைந்து, வாழ்க்கையின் பிரச்சனைகளால் நீ அலைமோதினால், உன் கவனத்தை இயேசுவின் மீது வைத்து, அவரை நோக்கிப் பார். உன் இருளில், ஒரு நட்சத்திரத்தைப்போல, கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார், அவருடைய சமூகத்தில் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை!
யோவான் சொன்னதுபோல், இயேசு “இருளில் பிரகாசிக்கும் ஒளியாய் இருக்கிறார்” (வேதாகமத்தில் யோவான் 1:5ஐப் பார்க்கவும்).
பிரகாசிக்கும் இந்த ஒளியானது மிகவும் விலையேறப்பெற்றது… அவதரிக்கவிருக்கும் நம்பிக்கையின் நாள் இதுவே.
“அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த தினசரி தியானத்தை வாசிக்கும் பல உண்மையுள்ள வாசகர்கள் எழுதியதுபோலவே, அவர்கள் சமீபகாலமாக, பொழுதுவிடியும் வேளையில் தங்களுடைய விடிவெள்ளி நட்சத்திரமான இயேசுவை நோக்கிப்பார்த்து, ஊக்கத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
“தேவனுடைய கிருபையால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் செய்திகளை வாசிப்பது எனது மன உறுதியை அதிகரிக்கிறது மற்றும் எனது நம்பிக்கையையும் நான் தேவனுக்குச் சொந்தமானவள் என்ற உணர்வையும் மேலும் வலுப்படுத்துகிறது. உங்கள் மின்னஞ்சல்களை எனது கைபேசியில் பெறுவதால் நான் எழுந்தவுடன் இதை உணர்கிறேன். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியானத்தை வாசிக்கிறேன்.” மேரி கிறிஸ்டல்
“‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியானத்தின் மூலம், இயேசு எப்படிப்பட்ட மேய்ப்பராய் எனக்கு இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்.” மார்கிரேட்
“நான் தினமும் காலையில் உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்… நான் காலை உணவையும் காபியையும் சாப்பிடும்போது வேதாகமத்தை வாசிப்பேன் மற்றும்/அல்லது பிரசங்கத்தைக் கேட்பேன். உங்கள் செய்தியையும் நான் கேட்பதுண்டு. நான் அந்தச் செய்தியில் சொல்லப்பட்ட நபராக இருக்க முயற்சிப்பேன். என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது; மனச்சோர்வின் ஆவி என்னைவிட்டுப் போய்விட்டது!” கரன்
தினமும் காலை வேளையில் நான் எழுந்தவுடன், இந்த தளத்தில் ஆண்டவர் என்னிடம் என்ன சொல்கிறார் என்பதை அறியும்படி, எனது மின்னஞ்சலைத் திறக்க விரைகிறேன். அதோடு, நீங்கள் அனுப்பும் செய்தியானது எப்போதும் துல்லியமானதாகவும், சுருக்கமானதாகவும், என் சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்றாகவும் இருக்கிறது ‘அனுதினமும் ஒரு அதிசயம்!’ என்ற இந்த தினசரி தியானத்தின் மூலம் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக! என் இருதயத்திற்கு ஒரு இளைப்பாறுதலைப் பெற்றுக்கொண்டேன்.” எலிசபெத்
இன்றைய தினமானது, அவருடைய ஒளியால் நிறைந்த ஆசீர்வாதமான நாளாக உனக்கு அமையட்டும்!