விசுவாசம் ஒரு பவர் ஸ்விட்ச் போன்றது
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன்னைப் பொருத்தவரையில், விசுவாசம் என்றால் என்ன? அதை எப்படி விவரிப்பாய்?
ரெய்ன்ஹார்ட் போன்கே என்ற சுவிசேஷகர், பெரும்பாலும் விசுவாசத்தை ஒரு பவர் ஸ்விட்சுடன் ஒப்பிட்டு, அது தானாக எதுவும் செய்யாது, ஆனால் மின்சாரம் கடந்து செல்ல அது அனுமதிக்கிறது என்று கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், நான் என் விசுவாசத்தை செயலில் காட்டினால், ஆண்டவரது வல்லமை நிறைந்த மின்னோட்டம் கடந்து வருகிறது! ஆனால்… நான் சுவிட்சை இயக்கவில்லை என்றால் எதுவும் நடக்காது என்று சொல்லலாம்!
“மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. (மத்தேயு 21:22)
விசுவாசத்துடன் கேள்! ஆண்டவரை நம்பு, ஒரு அதிசயத்தை எதிர்பார். நாம் தேவனை தைரியமாக நெருங்க முடியும் என்று அவரது வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14)
அவர் உன் வேண்டுதலுக்குச் செவிகொடுக்கிறார், மேலும் அவர் உனக்குச் சிறந்ததை அளிக்கிறார்.
இன்று, வாழ்க்கையின் எந்தப் பகுதியில் உனக்கு ஒரு அதிசயம் தேவைப்பட்டாலும் சரி, அது சரீரப் பிரகாரமான சுகமாக இருந்தாலும் சரி, உன் வேலை அல்லது உறவுகளில் அதிசயமான இடைபடுதல் தேவை என்றாலும் சரி, நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: விசுவாசத்தின் பவர் சுவிட்சை இயக்கிவிடு! அதை எப்படிச் செய்வது? ஜெபத்தின் மூலமும் விசுவாசத்தில் நாம் கொண்டுள்ள உறுதியின் மூலமும் அதைச் செய்ய முடியும்.
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “பிப்ரவரி 2015ல் எனக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நான் சில நாட்களாக இந்த வியாதியால் போராடி வந்தேன், உண்மையில், இப்போது நான் எதிர்பார்த்ததை விட மிகவும் நன்றாக குணமடைந்திருக்கிறேன். ஆண்டவரது கரம் என் மீது அமர்ந்திருக்கிறது என்பதையும், ஒவ்வொரு நாளும் அவர் என்னைக் குணப்படுத்தி வருகிறார் என்பதையும் நான் நிச்சயமாக அறிவேன். எந்தக் காரணத்தினாலும் யாருடைய முன்னிலையிலும் நான் ஆண்டவரை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்!” (ராபர்ட்)