வானவில் அடையாளமாகிய வாக்குத்தத்தம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› வானவில் அடையாளமாகிய வாக்குத்தத்தம்

வானவில்லை வைத்து ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் உனக்கு நினைவிருக்கிறதா? வெள்ளத்தின் மூலம் பூமியிலிருந்து தீமையை அகற்றிய பிறகு, ஆண்டவர் ஒரு வாக்குத்தத்தத்தை அளித்தார். ஆதியாகமம் 9 ஆம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கவும்.

“அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.” (ஆதியாகமம் 9:12-16)

இது ஒரு பாதுகாப்பு, மீட்பு மற்றும் நம்பிக்கைக்கான ஒரு அழகான வாக்குத்தத்தம்! மேலும், ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறார்.

நான் வாக்குத்தத்தத்தை விரும்புகிறேன், அதேநேரத்தில் அதனுடன் கூடவே வரும் பாடத்தையும் விரும்புகிறேன். மழை இல்லாமல் வானவில் வராது. இன்று புயல்களையும் சவால்களையும் நாம் சந்தித்துக் கொண்டிருந்தாலும், மழை பெய்து குறையும்போது, இயேசுவின் மூலமாக ஒரு அழகான வாக்குத்தத்தம் எப்பொழுதும் நமக்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்… புயல் நிச்சயமாக அடங்கும்! நீ இந்தப் புயலைக் கடந்து செல்லுவாய், நீ அவ்வாறு கடந்து செல்லும்போது, ஆண்டவர் தம்முடைய அன்பையும் தம்முடைய வாக்குத்தத்தத்தையும் நீ தவறவிடாத வகையில் காண்பிப்பார்!

சிறிது நேரம் ஒதுக்கி தேவனை நோக்கி ஜெபம் செய்வோம்: “இயேசுவே, உமது அன்பு எனக்கு உண்டு என்பதை நீர் எப்பொழுதும் நினைவூட்டுகிறீர்! உமது வாக்குத்தத்தங்கள் மற்றும் மாறாத வார்த்தையின் வெளிச்சத்தில் உம்மைக் காண இன்று எனக்கு உதவும். நாங்கள் எந்த மழையை சகித்துக்கொண்டிருக்கிறோமோ, அது எதிர்காலத்தில் உமது வாக்குத்தத்தத்தின் நிமித்தமாக ஆசீர்வாதத்தைத் தரும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆமென்.”

நீ ஒரு அதிசயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!