வனாந்திரம் பூத்துக்குலுங்கும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வனாந்திரம் பூத்துக்குலுங்கும்!

“ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்திரத்தில் அழைத்துக் கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி…” (வேதாகமத்தில் ஓசியா 2:14ஐப் பார்க்கவும்)

சொல் அகராதியில், “வனாந்திரம்” என்ற வார்த்தைக்கு ஒரு தரிசு நிலம், வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோணத்தில் பார்க்கையில், வனாந்திரமானது அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இல்லை. எனினும், தேவனுடைய சிருஷ்டிப்பானது அழகானதும் ஆச்சரியங்கள் நிறைந்ததுமான போதனைகளால் நிறைந்திருக்கின்றன.

மழை, அதிக வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் போன்ற சிறந்த வானிலை ஒன்றாக சேர்ந்து வரும்போது, ​​வனாந்திரம் செழித்து வளரும்.

நீ இப்போது வனாந்திரத்தின் வறண்ட, சுட்டெரிக்கும் காற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாயா?
அப்படியானால், உன் வனாந்திரத்தின் பெயர் என்ன? மனச்சோர்வு… விவாகரத்து… நோய்… தனிமை… வேறு ஏதாவது… இதைப்போன்று என்னவென்று அழைக்கப்படுகிறது?

அதன் பெயர் என்னவாக இருந்தாலும் சரி, இந்த வனாந்திரம் உன் கல்லறையாக இருக்கப்போவதில்லை. அது உன்னைப் புதைத்துவிடாது. வனாந்திரத்தில் நீ செத்துவிட மாட்டாய்… நீ வாழ்வாய். ஆம், நீ வாழ்ந்து கர்த்தருடைய கிரியைகளை அறிவிப்பாய்! (வேதாகமத்தில் சங்கீதம் 118:17 ஐப் பார்க்கவும்)

விசுவாசத்தோடு, பெலனடைந்து எழுந்து: “தேவனே – நீர் என்னை விடுவிக்கும் தேவன்! எனக்கு ஜெயம் தரும் தேவன், நான் உம்மை மட்டுமே விசுவாசிக்கிறேன்!” என்று அறிக்கையிடு.

பின்மாரி மழையை நீ அனுபவிப்பாயாக (வேதாகமத்தில் யோவேல் 2:23 ஐப் பார்க்கவும்)

உன் வாழ்வில், அவருடைய ஜீவனைப் பெற்றுக்கொள். எழுந்து பார்… வனாந்திரம் செழிக்கிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!