வங்கி அல்லது பாதுகாப்பு பெட்டகத்தைக் காட்டிலும், ஆண்டவர் உறுதியாக பாதுகாப்பவர்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வங்கி அல்லது பாதுகாப்பு பெட்டகத்தைக் காட்டிலும், ஆண்டவர் உறுதியாக பாதுகாப்பவர்!

உண்மையிலேயே தலைசிறந்த படைப்பாக இருக்கும் ஒரு பிரபலமான ஓவியம் போன்ற விலையுயர்ந்த பூர்வீக சொத்து ஒன்றை நீ பெற்றுக்கொண்டாய் என்று கற்பனை செய்துகொள். அதைக் களவாடுபவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாய்?

நீ அதைப் பாதுகாப்பாக, வங்கியில் வைக்கலாம் அல்லது கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தலாம்… இருப்பினும், உன் உடைமை பாதுகாக்கப்படும் என்று எந்த anti-theft அமைப்பாலும் 100% உத்தரவாதம் அளிக்க முடியாது.

இறுதியில் காணாமல்போகக்கூடும் பொருட்களைப் பாதுகாக்க புத்திசாலித்தனமான முறைகள் இங்கே பூமியில் உருவாக்கப்பட்டுள்ளன. நீ மிகவும் மதிப்புமிக்க நபர். வேதாகமம் கூறுவது போல்… “வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.” (வேதாகமத்தில் நீதிமொழிகள் 4:23ஐப் பார்க்கவும்)

உன் ஜீவன், உன் ஆத்துமா, உன் இருதயம், உலக அதிசயங்களை விட மிகவும் விலையேறப்பெற்றது! இன்று, இந்தப் பொக்கிஷங்களை உன் பரலோகப் பிதாவிடம் திருப்பி ஒப்படைத்துவிடு. அவர் உண்மையிலேயே பாதுகாப்பானதும் உறுதியானதுமான ஸ்தலமாக இருக்கிறார்!

  • அவர் உன்னைப் பாதுகாக்கும் புகலிடமாகவும், உன் தாகத்தைத் தீர்க்கும் ஊற்றாகவும் இருக்கிறார்.
  • எது எப்படியாயினும், அவரிடம் இருந்து எதையும் திருடும் பலம் யாருக்கும் இல்லை.
  • எல்லாவற்றிக்கும் மேலாக நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
  • அவர் ஒருபோதும் உனக்கு‌த் தீங்கிழைக்கவோ உன்னைப் புண்படுத்தவோ மாட்டார்.

அவரை 100% நம்பு. உனக்குப் பிரியமானதைப் பத்திரமாக ஒப்படைக்க உன் பிதாவின் கரங்களை விட சிறந்த இடத்தை உன்னால் பூமியில் கண்டுபிடிக்க முடியாது.

நான் உன்னை மிகவும் பாராட்டுகிறேன், நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

சாட்சி: “’அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலை வாசிக்கத் துவங்கிய நாட்களில், நான் மிகவும் சோகமாகவும் கவலையோடும் இருந்து வந்தேன். அந்த நேரத்தில், என் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் மரித்துவிடுவாரோ என்று நான் மிகவும் பயந்துகொண்டிருந்தேன், ஆனால் ஆண்டவர் கிரியைசெய்து அவரைக் குணப்படுத்திவிட்டார். அப்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் மருத்துவமனையில் இருந்த நாட்களில், நான் மிகுந்த சமாதானத்தை உணர்ந்தேன், அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான வலிமையை ஆண்டவர் எனக்குக் கொடுத்திருந்தார். இப்போது, என் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆண்டவரை நம்பி வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிறேன்.” (பிரமிளா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!