யார் இந்த மகிமையின் ராஜா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› யார் இந்த மகிமையின் ராஜா?

இயேசு கிறிஸ்துவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரைப்போல் ஒருவரும் இல்லை; அவர் ஈடு இணையில்லாதவர். அவர் பலமுள்ளவர், வல்லமை வாய்ந்தவர் மற்றும் ஜீவனுள்ளவர்… அவர் தேவன்!

“யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா).” (வேதாகமத்தில் சங்கீதம் 24:10ஐப் பார்க்கவும்)

அவர் இருக்கிறார் என்பதை அனைத்து பரிமாணங்களிலும் அறிந்துகொள்வதற்கு உன் வாழ்க்கை முழுவதையும் நீ அர்பணித்தாலும் கூட நேரம் போதாது. அவர் மகிமைபொருந்தியவர், அற்புதமானவர்! முற்றிலும் ஈடு இணையில்லாதவர்.

  • அவர் பலமுள்ளவராகவும், அதே நேரத்தில் மென்மையானவராகவும் இருக்கிறார். அவர் சிங்கம் போன்றவராகவும் ஆட்டுக்குட்டியானவராகவும் இருக்கிறார்.
  • அவர் உனக்காக வழக்காடுபவராகவும் உன் நியாயாதிபதியாகவும் இருக்கிறார்.
  • அவர் ஆதியும் அந்தமுமானவர். அவருக்குத் துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை, எல்லையும் இல்லை.
  • அவர் உன் நண்பர், உன் பாதுகாவலர், உன் இரட்சகர், உன் கர்த்தர், மற்றும் உன் வாழ்வை நிலைநிறுத்துபவர்.

மகிமையின் ராஜா புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர், இருப்பினும் நீ உன் முழு இருதயத்தோடு அவரைத் தேடவும், அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவும் அவர் உன்னை அழைக்கிறார். எத்தனை அழகான ஈவு இது! இன்று அவர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்பதை நினைத்து அவரை ஆராதிக்கும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நாம் சேர்ந்து ஜெபிப்போம்… “ஆண்டவரே, நீர் மகிமையின் ராஜாவாக இருப்பதை நான் அறிக்கையிடுகிறேன்! உம்மை அதிகமாக அறிந்துகொள்ள எனக்கு உதவுவீராக. அனுதினமும் நான் உம்மைப்போலவே வாழும்படிக்கு, உம்முடன் அதிக நேரம் செலவிடவும், உமது வார்த்தையைப் படிக்கவும், உமது சத்தத்தைக் கேட்கவும் எனக்கு உதவுவீராக! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!