மெய்யாகவே உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மெய்யாகவே உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்!

இன்று காலை, நீ சூடான காபி குடித்தாயா? அல்லது ஒருவேளை நீயும் என்னைப்போல தேநீர் பிரியரா? நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பினால், மாலை 4:00 மணியளவில் சுவையான, நறுமணம் வீசும் தேநீர் கோப்பையைக் கொண்டு வா. நான் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்… இன்று நான் உன்னுடன் தேநீர் பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; குறிப்பாக அதன் இலைகள் அவற்றின் நறுமணத்தை வெளியிடும் செயல்முறையைப் பற்றி நாம் பேசலாம்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 4:13-ல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று கூறுகிறார்.

இந்த வசனத்தில், “பலப்படுத்துகிறார்” என்ற வார்த்தையின் அர்த்தம் கிரேக்க மொழியில் “அதிகாரத்தை உட்செலுத்துகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உட்செலுத்துதல் பற்றிய இந்த யோசனை என்னை தேநீர் பற்றி சிந்திக்க வைக்கிறது. நிறமோ, நறுமணமோ சுவையோ இல்லாத தண்ணீரை நாம் ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடாக்குகிறோம். அது மிகவும் சூடாக்கப்பட்டவுடன், தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிவிடுகிறது. தண்ணீரின் நிறம் மாறி, ஒரு புதிய சுவையைப் பெறுகிறது. பிறகு இதில் பாலை ஊற்றி கொதிக்க வைத்தவுடன் தேநீர் அருந்துவதற்குத் தயாராகிறது!

நீ ஜெபித்து, தேவனைத் தேடும்போது, உன் இருதயம் கீழ்ப்படியத் தயாராகிறது. அப்போதுதான் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உனக்குள் ஊற்ற முடியும், மேலும் உனக்குள் ஏதோ ஒருவித மாற்றம் நடைபெறத் தொடங்குகிறது… அவரது சுபாவம், அவரது நிறம், அவரது ஜீவன் உன்னிலிருந்து வெளிவருகிறது. அவர் உன் முழு வாழ்க்கையையும், மாற்றியமைத்து, அதிகாரம் செலுத்துகிறார், அவர் மூலமாக எல்லாவற்றையும் செய்யும் திறனை நீ பெற்றுக்கொள்ளும்படி உன்னைப் பெலப்படுத்துகிறார்.

நாம் அடிக்கடி செய்யும் தவறு என்னவென்றால், எல்லாவற்றையும் நாமாகவே செய்ய முயல்வதுதான்.

இருப்பினும், “…என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. (வேதாகமத்தில் யோவான் 15:5ஐப் பார்க்கவும்) அவர் இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் இதன் அர்த்தமா? நிச்சயமாக அப்படி இல்லை. இயேசு இல்லாமல் பல காரியங்களை நம்மால் செய்ய முடியும். ஆனால் அதேசமயத்தில், இயேசு இல்லாமல், நம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் மாற்றுவதற்குப் பங்காற்றும்படி பயனுள்ள பலனைத் தரும் கிரியைகள் எதையும் நம்மால் தனியாக செய்ய முடியாது.

பரிசுத்த ஆவியானவர் வந்து உன் வாழ்வில் அவருடைய ஜீவனை “ஊற்ற” இடங்கொடு. அவர் தம்முடைய பலத்தால் உன்னை நிரப்பும்படி உன் ஆத்துமா, உன் இருதயம் மற்றும் உன் எண்ணங்கள் ஆகியவற்றை ஆயத்தப்படுத்து. வேதத்தை வாசித்து ஜெபிப்பதன் மூலமும், அவருடைய துதிப் பாடல்களைப் பாடுவதன் மூலமும் தேவனுடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிடு.

அவருடைய ஜீவனை உனக்குள் வர நீ அனுமதித்தால், அவர் உன் மூலமாகத் தம்முடைய ஜீவனை வெளிப்படுத்துவார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!