முடிவுதான் ஒன்றிற்கான துவக்கம் என்றால் என்ன செய்வது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› முடிவுதான் ஒன்றிற்கான துவக்கம் என்றால் என்ன செய்வது?

ஆண்டவருடன் நான் செலவிடும் என் வேத தியான நேரத்தில், இயேசு எனக்காக என்ன செய்தார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், ​​சில சமயங்களில் நான் இப்படி நினைத்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன், “தேவனே, ஏன் இயேசு இவ்வளவு கொடூரமான முறையில் துன்பப்பட்டு மரிக்க வேண்டும் ?”

வேதாகமம் நம்மிடம் இந்தக் கேள்வியை வித்தியாசமாகக் கேட்கிறது: “கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா?” (லூக்கா 24:26)

ஆம், இந்தப் பயங்கரமான துன்பத்தை அவர் தாங்க வேண்டியிருந்தது. ஏன்? ஏனெனில், ஊழியப் பணியின் நிறைவேற்றத்தைக் குறிக்கும் அவரது மரணம், நம்மை ஆண்டவரின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆக்குகிறது!

ஏனென்றால், அவருடைய மரணம், ஜீவனின் வல்லமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருகிறது, அதை எவருடனும் ஒப்பிட முடியாது. இவ்வாறு, இயேசுவின் வாழ்க்கையின் முடிவு அவருடனான நம்முடைய ஆரம்பத்தைக் குறிக்கிறது!

எனவே, நீ விட்டுக்கொடுக்கும் காலங்களின் வழியாகச் செல்ல வேண்டியிருக்கும்போது, ​​இதைப் பற்றிச் சிந்தித்துப்பார்: கம்பளிப்பூச்சியைப் போலவே, சில சமயங்களில், மகத்தானதும் வல்லமை மிக்கதுமான ஜீவனைப் பெற்று பலன் தர, நாம் மரணத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆம்… இது பைத்தியக்காரத்தனமானது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதுதான் உண்மை: மரணத்திலிருந்து ஜீவன் வெளிப்படக் கூடும். முடிவு ஆரம்பமாக இருந்தால் என்ன செய்வது?

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!