மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது!

பரிசுத்த ஆவியானவர் மிகப் பெரிய தேற்றரவாளன் என்பது உனக்குத் தெரியும்… ஆனால் அவர் மிகப்பெரிய ஆசிரியர் என்பதும் உனக்குத் தெரியுமா?

“உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (வேதாகமத்தில் சங்கீதம் 73:24ஐப் பார்க்கவும்)

பரிசுத்த ஆவியானவரின் உதவியால் மீண்டும் வகுப்புகளைத் தொடரும் வாய்ப்பு உனக்கும் வந்திருக்கிறது! அவர் உனக்கு நிரந்தரமானதும் மற்றும் உனக்கு ஏற்றதுமான பயிற்சியளிக்கிறார். உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும், அவர் உன் கூடவே இருந்து, உனக்குப் போதிக்கிறார். வேத வாக்கியங்களில் முக்கிய பத்திகளை உனக்குக் காட்டி, அவர் உன் இருதயத்தில் ஏவுதலைக் கொடுத்து, உன்னிடம் மென்மையாகவும் துல்லியமாகவும் பேசுகிறார்.

ஒவ்வொரு நாளும், பரிசுத்த ஆவியானவர் உன்னை இன்னும் கொஞ்சம் வளரச் செய்கிறார். அவர் தம்முடைய ஜீவனையும், பெலத்தையும், சத்தியத்தையும் உனக்குத் தருகிறார். சிறந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்தவரான தேவனுடைய ஆவியின் உதவியால், உன் அனைத்து வகுப்புகளிலும், வினாடி வினாக்களிலும் மற்றும் பரீட்சைகளிலும் நீ தேர்ச்சி பெறுவாய்! “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்று தேவனுடைய வார்த்தை கூறுவதுபோல் அவர் உனக்குப் போதிப்பார்.

இந்த புதிய கல்வி ஆண்டின் ஒவ்வொரு தருணத்திலும், அவர் உன்னுடன் கூட இருக்கிறார், உன்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். பரிசுத்த ஆவியானவருடன் இணைந்து நீ மீண்டும் பள்ளிக்குச் சென்று, அவர் உனக்குக் கற்பிக்கும்படி நீ அவருக்கு இடமளிக்குமாறு நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர் தமது ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை உன் இருதயத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் உன் ஆத்துமாவை நிலைநிறுத்தட்டும்!

மீண்டும் பள்ளிக்குத் திரும்பிச் செல்லும் நேரம் வந்துவிட்டது! சிறந்த ஆசிரியர்களுள் மிகவும் சிறந்தவரான… பரிசுத்த ஆவியானவரின் பாதபடியில் வந்து அமர்ந்துவிடு!

ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்: “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த மின்னஞ்சலை வாசிக்க நான் ஒருபோதும் தவறியதில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஓடிக்கொண்டிருந்த ரயில் ஒன்று என் மகன் மீது மோதியதால், அவனுக்கு அடிபட்டது, அவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழ்நிலையில் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சல் என்னை மிகவும் ஊக்குவிப்பதாய் இருக்கிறது, என்னை புன்னகை செய்ய வைக்கிறது, மேலும் இந்த ஓட்டத்தைத் தொடர ஒவ்வொரு நாளும் எனக்கு பலத்தை அளிக்கிறது. தேவன் ஆசீர்வதிப்பாராக, தேவன் ஆசீர்வதிப்பாராக, தேவன் ஆசீர்வதிப்பாராக. எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதற்காக நான் நன்றிகளை தெரிவிக்கிறேன்.” (வில்மா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!