மிகவும் அழகான பரிசுகள் எங்கிருந்து வருகின்றன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› மிகவும் அழகான பரிசுகள் எங்கிருந்து வருகின்றன?

பொதுவாக, நாம் ஏதாவது விசேஷமான நாட்களில் தான் பரிசுகளை பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? ஆண்டவர் நமக்கு கொடுப்பதற்கு ஏதாவது விசேஷ நாளுக்காக காத்திருப்பதில்லை. மேலும் அவர், நம்மை  நித்தமும் நேசிக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” (யாக்கோபு 1:17)

உங்கள் பரலோக பிதா உங்களுக்காக நன்மையானவற்றை வைத்திருக்கிறார். உண்மையாக சொன்னால், உங்களுக்கென்று மிகச்சிறந்தவற்றை பிரித்தெடுத்து வைத்திருக்கிறார். அவர் உங்களுக்காக வைத்திருப்பது வேறு எதற்கும் ஒப்பாகாது:

  • அவரது சமாதானம், அவரது மகிழ்ச்சி, அவரது உயிர்.
  • அவர் உங்களிடம் ஒப்படைத்துள்ள பணியை நீங்கள் இந்த பூமியில் நிறைவேற்றுவதற்கு தேவையான திறன்.
  • எந்த சூழ்நிலையிலும், இடைவிடாமல், இந்த உலகத்தில் ஒரு வெளிச்சமாக வாழத் தேவையான பெலன்.

ஆம், அவர் வார்த்தை சொல்வதுபோல, நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்தே வருகிறது. சிறந்ததிலும் மிகச்சிறந்தது! வானங்களையும், நட்சத்திரங்களையும், பூமியையும் படைத்த உங்கள் பிதாவாகிய தேவன், இன்று உங்களுக்கென்று கொடுக்க திட்டமிட்டிருப்பதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன்.

அவருடைய நாமம் மகிமைப்படுவதாக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!