மரியாளைப் போல… நீ இயேசுவை சுமந்து செல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மரியாளைப் போல… நீ இயேசுவை சுமந்து செல்!

தாயின் வயிற்றில் வளரும் குழந்தையைப் பார்ப்பது என்பது எத்தனை இரகசியமானது!
அந்தக் குழந்தை (அவன்/அவள்) யாரைப் போல் இருக்கும்? அந்தக் குழந்தையின் குணம் எப்படி இருக்கும்? என்று குழந்தை இவ்வுலகிற்கு வரும் நாள்வரை… ஒவ்வொருவரும் யூகித்து, அநேக யோசனைகளைக் கொண்டிருப்பார்கள்!

இன்று, நான் வேதாகமத்தில் உள்ளதும் நம் அனைவருக்கும் தெரிந்ததுமான ஒரு கர்ப்பத்தின் நிகழ்வைப் பற்றி உன்னுடன் பேச விரும்புகிறேன்… அது மரியாள் கர்ப்பமான நிகழ்வுதான்!

“இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (வேதாகமத்தில் மத்தேயு 1:23ஐப் பார்க்கவும்)

மற்ற எல்லாக் குழந்தைகளையும் போலவே, இயேசுவும் தமது தாயின் வயிற்றில் ரகசியமாக வளர்ந்தார். அந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அவர் பிறக்கும் நேரம் வரும்வரை, அவர் மறைவில் வளர்ந்தார், இறுதியாக அவர் மனுஷர்களுக்குக் காணப்பட்டார்.

கர்த்தர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் அல்ல என்று தங்களுக்குத் தெரிந்தபடி பலரும் தங்கள் சொந்த யோசனையை உருவாக்குகிறார்கள். இருப்பினும் இன்று, அவருடைய வாழ்க்கையை சுமந்துசென்று மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியதும், அதை உன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் உன்னுடைய கடமையாய் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் வாழ்விற்கான பலன் உனக்குள் தோன்றும்வரை, அவரை உன்னில் வாழவும் வளரவும் அனுமதிப்பது உன் கரத்தில்தான் இருக்கிறது!

அப்போஸ்தலனாகிய பவுல், “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; …” என்று சொன்னான் (வேதாகமத்தில் கலாத்தியர் 2:20ஐப் பார்க்கவும்).

கிறிஸ்துவின் வாழ்க்கையை சுமந்து செல்வதும் பகிர்ந்துகொள்வதும் அவரைப்போல் செயல்படுவதாகும். உன் சத்துருக்களை நேசி. உன்னை சபிக்கிறவனை ஆசீர்வதி. உனக்கு எதிராக குற்றம் செய்பவரை மன்னித்துவிடு. உன் தெருவில் நீ சந்திக்கும் அந்நியரை அணுகி உதவிசெய்யவும், உன் அண்டை வீட்டாரிடம் சென்று அவர்களை அக்கறையோடு விசாரிக்கவும் நேரம் ஒதுக்கு. கிறிஸ்துவின் அன்பையும் மனப்பான்மையையும் நாம் தினமும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவோம்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “கர்த்தாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணத்திலும் உமது வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த எனக்கு உதவுவீராக. நீர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்! என்னில் நீர் மகிமைப்படுவீராக… பலரும் தாங்கள் சென்றுகொண்டிருக்கும் வழியில் இருந்து திரும்பும்படிக்கு உமது ஜீவனும் அன்பும் அவர்களைத் தொடட்டும்! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

சாட்சி: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவினாலேயே நான் உயிர் வாழ்கிறேன் என்று என் சக ஊழியர்களிடம் சொல்வதற்கான வழிகளை தேவன் திறந்து வைத்திருப்பதால், என்னால் அவர்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்க முடிகிறது!” (ஜான்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!