“மன்னிப்பு” என்ற வார்த்தை “பாக்கியவான்/பாக்கியவதி” என்பதன் அருஞ்சொற்பொருள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› “மன்னிப்பு” என்ற வார்த்தை “பாக்கியவான்/பாக்கியவதி” என்பதன் அருஞ்சொற்பொருள்!

அருஞ்சொற்பொருள் என்பது ஒரு சொல்லின் மிகவும் நெருங்கிய அர்த்தங்களைக் கொண்ட சொற்களாகும். இன்று காலை வேளையில், “மன்னிப்பு” என்ற வார்த்தை “பாக்கியவான்/பாக்கியவதி” என்ற வார்த்தைக்கு அருஞ்சொற்பொருளாக இருக்கிறது என்பதை என்னால் தேவனுடைய வார்த்தையிலிருந்து உறுதிப்படுத்த முடியும்…

“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.” (வேதாகமத்தில் சங்கீதம் 32:1-2ஐப் பார்க்கவும்)

இயேசுவின் இரத்தம் உன் மீறுதல்களைக் கழுவிவிட்டதால், உன் பாவ பாரம் இனிமேல் உன் தோள்களின் மீது இருப்பதில்லை… அது அவருடைய தோள்களின் மீது இருக்கிறது!

உன் ஆத்துமா இனி பயத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை, குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இயேசு உன் பாவங்களைச் சுமந்துதீர்த்துவிட்டார். அவர் சகல பாவத்தையும் தாமே சுமந்துகொண்டார், அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்! அதனால், மன்னிப்பு என்பது நிச்சயமாக பாக்கியவான்/பாக்கியவதி என்பதற்கு இணையான ஒரு வார்த்தையாகும்! தேவனுடைய மன்னிப்பு உன் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்டதால், உன் சமாதானம் பரிபூரணமானதாகவும், முழுமையானதாகவும் மற்றும் நிறைவானதாகவும் இருக்கிறது.

தேவன் உனக்கு வழங்கிய ஆசீர்வாதமானது நித்தியமானது மற்றும் முழுமையானது, அது அவருடைய எல்லையற்ற மன்னிப்பிற்கான பலனாக இருக்கிறது. கர்த்தரின் இரக்கத்திற்காகவும், அவர் நமக்கு அளிக்கும் ஆசீர்வாதத்திற்காகவும் என்னுடன் சேர்ந்து அவருக்கு நன்றி சொல்!

“கர்த்தாவே, நன்றி! இயேசுவின் இரத்தத்திற்காகவும், செலுத்தப்பட்ட விலைக்கிரயத்திற்காகவும், என் பாவ சுமை என் மீது பாரமாக இல்லாததற்காகவும் உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்துவில் நான் பெற்றிருக்கும் சமாதானத்திற்காவும் விடுதலைக்காகவும் நன்றி! சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் செய்த எல்லாவற்றிற்காகவும், நீர் செய்துகொண்டிருக்கிற எல்லாவற்றிற்காகவும் என் ஆத்துமா உம்மை ஸ்தோத்தரிக்கிறது! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!