மன்னிப்பது உன்னை விடுவிக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மன்னிப்பது உன்னை விடுவிக்கிறது!

நீ எப்போதாவது ஒருவரை மன்னிக்க முயற்சித்தபோது, அதை உன்னால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்ததுண்டா?

அறிந்தோ அல்லது அறியாமலோ உனக்கு செய்யப்பட்ட காரியத்தின் நிமித்தமாக உனக்குள் ஏதோ ஒன்று உன்னைத் “தடுத்து நிறுத்துகிறது” என்பதுபோல் உணர்ந்திருக்கலாம். அறியாமல் பிறர் உனக்குச் செய்ததை உண்மையிலேயே நீ எப்படி மன்னிப்பாய்?

இது உன் உணர்வுகளைப் பொறுத்தது அல்ல. மன்னிப்பு என்பது தேவனுக்கு முன்பாக உனது கீழ்ப்படிதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வார்த்தை உன்னை மன்னிக்கும்படி ஊக்குவிக்கிறது… “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:32)

எனவே, இது உன் விருப்பத்தின் செயலாக இருக்கிறது, ஆனால் இது ஒரு தெய்வீக செயலாகவும் இருக்கிறது.
மன்னியாமை விசுவாசத்தின் பாதையைத் தடுத்து, உன் மகிழ்ச்சியைத் திருடுகிறது, மன்னிப்பு உள்ளார்ந்த விடுதலையை அளித்து சமாதானத்திற்கு வழி வகுக்கிறது.

மன்னிப்பு என்பது, உன் வாழ்க்கையில் கர்த்தர் இடைபட நீ இடமளிப்பதன் மூலமாக, பரலோகத்தின் வாசலைத் திறக்க உதவும் திறவுகோல் போன்றதாக இருக்கிறது.

என் நண்பனே/தோழியே, இந்த வார்த்தைகள் உன்னுடன் பேசுகிறது என்று நீ உணர்வாயானால், என்னுடன் ஜெபம் செய்ய உன்னை அழைக்கிறேன்.. “கர்த்தாவே, நீர் என் இருதயத்தைப் பார்க்கிறீர். (நீ மன்னிக்க விரும்பும் நபரின் பெயரை பெயர் சொல்லவும்) இவரை மன்னிக்க என்னால் முடியாது என்று உமக்குத் தெரியும். நான் முழு பலத்துடன் முயற்சி செய்துவிட்டேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு உண்மையிலேயே அந்த நபரை மன்னிக்கவும், உம்மோடு சுதந்திரமாக நடக்கவும், உமது ஜீவன், மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தினால் நிரம்பியிருக்கவும் எனக்கு உதவும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த நபரை நேசிப்பதற்கான அன்பினால் என் இருதயத்தை நிரப்புவீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்”.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!