மன்னிக்கப் பழகிக்கொள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› மன்னிக்கப் பழகிக்கொள்

சில நேரங்களில், களைகள் நம் இருதயத்தில் மறைந்திருக்கும். ஒருவேளை அவை தன் நிழலின் கீழ் இருப்பவைகளை மறைத்து வைக்கலாம், ஆனால் அக்களைகள் முழு தோட்டத்தையும் அழித்துவிடும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பது உனக்குத் தெரியுமா!

நாம் ஒருவர் மீதான கோபம், அவரை மன்னிக்க முடியாத தன்மை, கசப்பு, வருத்தம் போன்றவற்றை நமக்குள் கொண்டிருக்கலாம்…

கொஞ்சம் கொஞ்சமாக, இந்த உணர்வுகள் நம் உள்ளத்தை மாசுபடுத்தி, இறுதியில் நமது தோட்டங்களை (நாம் எப்படிப்பட்டவர்கள்) ஆண்டவருக்காக மலர்ந்து பிரகாசிக்கவிடாமல் தடுக்கின்றன.

இன்று, இந்தக் காலை நேரத்தில், இப்படிப்பட்ட களைகளை அடையாளங்கண்டு, அவற்றை உன் இருதயத்திலிருந்து வேரோடு அகற்றுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள். இவ்வாறு களைகளை அகற்றுவது வேதனையளிக்கும் என்பது உண்மைதான், ஆனால் அதேசமயத்தில், நிச்சயமாக அது உன் வாழ்விற்கு நன்மை பயக்கவல்லதாய் இருக்கும்!

கோபம், மன்னிக்க இயலாமை அல்லது கசப்பு ஆகியவற்றின் வேர்களை ஒன்றன் பின் ஒன்றாக அகற்றி, உனக்கு விஷமாக மாறும் இந்த பாரத்திலிருந்து உன்னை விடுவித்துக்கொள். உன்னையும் மன்னித்துவிடு, மற்றவர்களையும் மன்னித்துவிடு.

முழு விடுதலையோடு வாழ உனக்கு முழு உரிமை உண்டு… இயேசு தம் ஜீவனையே விலைக்கிரயமாகக் கொடுத்து உனக்காக இந்த சுதந்திரத்தை வாங்கியிருக்கிறார்! (வேதாகமத்தில் யோவான் 8:36ஐ பார்க்கவும்.)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என்னைக் காயப்படுத்தியவர்களை என்னால் மன்னிக்க முடிந்தது. என் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களில் மன வேதனையை அனுபவித்து வந்தேன். மன்னிப்பதற்கு சிறிது காலம் ஆனது, ஆனால் என்னைப் புண்படுத்தியவர்களை நான் மன்னித்துவிட்டதால், என்னில் விடுதலையை உணர்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் விழித்தெழுந்து, நம் வாழ்வில் ஆண்டவர் நமக்கு எவ்வளவாய் தேவைப்படுகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லும்படி, இந்தப் பூமியில் ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழக் கிடைத்துள்ள இன்னொரு நாளுக்காக நான் நன்றியுடன் இருக்கிறேன்… நம் வாழ்வில் நாம் அனைவரும் எப்படி அன்பினாலும், இரக்கத்தினாலும் இணைந்திருக்கிறோம் என்பது எனக்குப் புரிகிறது. ஐயா, நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” (தானியேல்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!