மனிதர்கள் மாறக்கூடியவர்கள்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
டிசம்பர் 23, 1978, அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறத் தொடங்கியது, அது மாற்றமடைந்தவர்களின் மூலம் தொடங்கியது. மனிதர்களால் மாற்றமடைய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நான் நம்புகிறேன்.
மனிதர்களால் மாற்றமடைய முடியும் மற்றும் அவர்களால் வியக்கத்தக்க விஷயங்களைச் செய்ய முடியும் என்பதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பு. ஆண்டவருக்கு மக்களின் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆதலால் அவர் மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள்ளும் அவர்கள் மூலமாகவும் கிரியை செய்கிறார். அப்போஸ்தலர் பவுல் இதை மிகவும் தெளிவாக சொல்கிறார்: “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.” (2 கொரிந்தியர் 5:20) மற்றும் பிலிப்பியர் 2:13 ல் வாசிக்கிறோம் “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”
க்ளென் ஸ்மித்தின் வாழ்க்கை மாறியதால் எனது வாழ்க்கை மாறத் தொடங்கியது ஏனென்றால் அவர் தனது விசுவாசத்தை ஒரு பல்கலைக்கழகத்தில் ஹாக்கி வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருந்தார். யாரோ ஒருவர் என் அக்காவிடம் பகிர்ந்து ஊக்குவித்ததால், எங்கள் முழு குடும்பத்திற்காகவும் எனக்காகவும் ஜெபம் செய்ய அவள் அழைக்கப்பட்டதாக உணர்ந்தாள். வேறொருவர் யாரோ என் அண்ணன் மிக்கியுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டதால், அவருடைய வாழ்க்கை மாறியது. ஆண்டவரால் தொடப்பட்ட ஒவ்வொரு வாழ்க்கையும் உங்களையும் என்னையும் போன்ற காயப்பட்ட, தொலைந்துபோன மற்ற மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறது.
அனைவரின் முயற்சிகளும் ஜெபங்களும் என் வாழ்க்கையில் நிறைவேறிய அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. நான் ஒருபோதும் இயேசுவைப் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் மதம் வேலை செய்யவில்லை என்றும் என் அண்ணனிடம் அப்போதுதான் நான் உரத்த குரலில் திட்டுயிருந்தேன். ஆச்சரியப்படும்விதமாக என் அண்ணன் என்னை திருப்பி திட்டவோ அல்லது என்னிடம் வாக்குவாதம் செய்யவோ இல்லை. அவர் எதுவும் பேசாமல் முழங்காலில் விழுந்து அமைதியாக ஜெபிக்கத் தொடங்கினார்.
ஏதோ ஒன்று என்னை ஆழமாகப் பற்றிக்கொண்டது. நான் முழங்காலில் விழுந்து அழ ஆரம்பித்தேன். பத்து வருடங்களாக ஊன்றியிருந்த கோபமும், வேதனையும், கசப்பும் கம்பளத்தில் படர ஆரம்பித்தன. அன்று இரவே நான் இயேசுவோடு உறவாட சரணடைந்தேன். என் சகோதரன் ஒரு எளிய ஜெபத்தில் என்னை வழிநடத்தினார்: “கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கைக்குள் வாரும். என் வாழ்வை உம்மிடம் கொடுக்கிறேன், உம்மை என் வாழ்வுக்குள் அழைக்கிறேன்.” வேதாகமத்தில் நமக்கு கொடுப்பட்டுள்ள வாக்குத்தத்தம் இதுவே: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12)
என் சரணடைதலுக்குப் பதிலாக ஆண்டவரிடம் நான் கேட்ட இரண்டு விஷயங்களை என்னால் மறக்கவே முடியாது: “ஆண்டவரே, என் வாழ்க்கையில் அன்பைத் தாரும், என் அப்பாவுடனான எனது உறவைக் குணமாக்கும்.”
நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்கிறீர்கள்? இந்த கிறிஸ்துமஸ் அன்று உங்களுக்கு அவர் என்ன தருவார்? நீங்கள் அவருக்கு என்ன கொடுப்பீர்கள்?
நீங்கள் ஒரு அற்புதம்.