மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ன?
முகப்பு ›› அற்புதங்கள் ››
பலர் மகிழ்ச்சிக்கான திறவுகோலை, மகிழ்ச்சியான எதிர்காலத்தைப் பெறுவதற்கான “மேஜிக்” என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்காதபோது, மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளின் விகிதம் கணிசமாக உயர்வாகவே உள்ளது.
வேதாகமம் அறிவிக்கிறது, “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” (சங்கீதம் 16:11) “… விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.” (நெகேமியா 8:10)
இயேசு கிறிஸ்து எனும் பெயரைக் கொண்ட ஒரு நபரில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை இன்று நீ உணருவாய் என்று நான் நம்புகிறேன். மெய்யாகவே அவர் ஒருவரே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்.
“மலைப் பிரசங்கம்” அல்லது “அருளுரை” என்று அழைக்கப்படும் அவரது முதல் வெளிப்படையான போதனையில், கிரேக்க மொழியில் இந்த வார்த்தையின் அர்த்தம் கூறுகிறபடி, பாக்கியவான்களாய் இருப்பதற்கு அல்லது மகிழ்ச்சியாக இருப்பதற்கான 9 கொள்கைகளை இயேசு பகிர்ந்துகொண்டார். ஆம், அவர் தமது முதல் பிரசங்கத்தின் சொற்றொடர்களைத் தொடங்க 9 முறை இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்!
இயேசுவே மகிழ்ச்சிக்கான வழி, நீ நம்பும் சத்தியம், உன்னை நிரப்பும் ஜீவன். கர்த்தர் உன்னை நிரப்பும்போது, நீ அவருடைய பலத்தையும், அவருடைய அன்பையும், அவருடைய ஞானத்தையும் பெறுவாய். எந்த சூழ்நிலையும் உன்னைத் தடுக்கவோ உன் முன்னேற்றத்தைத் தடுக்கவோ முடியாது, ஏனென்றால் மகிழ்ச்சி என்னும் ஊற்றுக்குக் காரணரான இயேசு உன்னில் வாழ்கிறார்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “மிக அதிக அளவில் கொலை, ஊழல், இனப் பிளவு மற்றும் வெறுப்பு விகிதம் உள்ள இடத்தில் நான் வாழ்ந்தாலும், இயேசு ஒரு கணம் கூட என்னை விட்டு விலகவில்லை, சிலர் இது சபிக்கப்பட்ட இடம் என்று கூட கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது ஆண்டவரும் சில கிறிஸ்தவ நண்பர்களும் சூழ்ந்துள்ள ஒரு பரலோகம் என்றே சொல்லுவேன். என்னைச் சுற்றியுள்ள பலருடன், நற்செய்தியைத் தொடர்ந்து துதித்தலுடன் பரப்ப இயலும் ஒரு சொர்க்க பூமியாகவே நான் இந்த இடத்தைப் பார்க்கிறேன், குறிப்பாக உங்களிடமிருந்து வரும் தினசரி செய்திகளைப் பகிர்ந்துகொள்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் உங்கள் ஊழிய ஸ்தாபனமும் ஆசீர்வதிக்கப்படுவதாக…” (பிரின்ஸ்)