புயலின் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவேன்…
முகப்பு ›› அற்புதங்கள் ››
இதோ உனக்காக ஆண்டவரின் இருதயத்திலிருந்து ஒரு செய்தி. இன்று அது உனக்குப் புத்துணர்ச்சியையும் ஆறுதலையும் தர வேண்டும் என்று ஜெபிக்கிறேன்…
கடுங்காற்றின் சத்தம் உன்னை பயமுறுத்தாமல் இருக்கட்டும்…
நான் இங்கே இருக்கிறேன், சரியான தருணத்தில், புயலை அமைதிப்படுத்துவேன்.
நான் அதனுடன் பேசுவேன், ஒரு வார்த்தையில், அதன் வீரியத்தை நான் அமைதியுறச் செய்வேன்.
சீறும் காற்று மற்றும் சூறாவளியின் சத்தத்தை நீ கேட்கும்போது,
கடல் எழும்புவதை நீ உணரும்போது, அலைகள் சீறி வெகுண்டு எழும்போது.
பயப்படாதே… என்னோடு பேசு!
எனக்கு அருகில் நெருங்கி வந்து என் கரங்களில் அடைக்கலம் புகுந்துகொள்.
உன் மீதான என் அன்பை எதுவும் அசைக்க முடியாது…
புயல் காற்றோ, சூறாவளியோ, கொடுங்காற்றோ அசைக்க முடியாது.
என் அன்பு, இங்கே மற்றும் இப்போது, இவற்றின் வலிமையை மேற்கொள்ள வல்லது.
நீ அனுபவிக்கும் புயலின் மத்தியில், என் அன்பு உனக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கிறது,
அது எப்போதும் உன்னை ஒரு பாதுகாப்பான துறைமுகத்திற்கு நேராக அழைத்துச் செல்கிறது; தொடர்ந்து உன்னை எனக்கு அருகில் இழுக்கிறது.
உன் இருதயம் எனக்கு அருகில் இருக்கும் வரை,
எதுவும் உன்னை எனது கரங்களில் இருந்து பறித்துவிட முடியாது…
அலைகளோ, கொடுங்காற்றோ, புயலோ ஒன்றும் செய்ய இயலாது.
உன் கை என் கரத்தைப் பிடித்திருக்கும் வரை,
எதுவும் நம்மைப் பிரிக்காது.
வேதாகமக் குறிப்புகள்: மாற்கு 4:39, ரோமர் 8:35-39