புனித வாரம் நாள் 2: விசுவாசத்தின் முக்கியத்துவம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› புனித வாரம் நாள் 2: விசுவாசத்தின் முக்கியத்துவம்

செவ்வாய் கிழமை காலை, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குத் திரும்பினர். அவர்கள் கடந்து சென்ற பாதையில், காய்ந்து பட்டுப்போயிருந்த ஒரு அத்தி மரத்தைக் கண்டனர், இயேசு தம்முடைய சீஷர்களிடம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை பேசினார்.

இன்று உனக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது? சிறிது நேரம் ஒதுக்கி, இந்தக் கேள்வியை சற்று ஆழமாக சிந்தித்துப் பார், இன்னும் அதிக விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நீ தேவனிடத்தில் கேட்கும்படி ஜெப நேரத்திற்குள் பிரவேசி!

தேவாலயத்தில், தம்மை ஒரு ஆவிக்குரிய அதிகாரம் கொண்ட நபராகக் காட்டிக்கொண்டதற்காக யூத மதத் தலைவர்கள் இயேசுவின் மீது எரிச்சலுற்றனர். அவரை கைது செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த அவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இயேசு அவர்களின் சர்ப்பிணைகளுக்கு நீங்கலாகி, கடுமையான நியாயத்தீர்ப்பை அவர்கள் மீது விதித்தார். கீழ்க்கண்ட வாக்கியத்தில் அவற்றைக் காணலாம்:

“குருடரான வழிகாட்டிகளே! … உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். … சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?” (மத்தேயு 23:24-33)

சகோதரனே/சகோதரியே, சற்று நேரம் ஒதுக்கி, உன் வாழ்வில் ஆண்டவரிடம் உண்மையில்லாமல் இருக்கும் எந்த ஒரு காரியத்தையும் அறிக்கையிடுமாறு உன்னை அழைக்கிறேன். உன் இருதயத்தை மரணத்துக்கு ஏதுவான இடமாக அல்லாமல், ஜீவனுக்கு ஏதுவான இடமாக மாற்றும்படி இயேசுவிடம் மன்றாடு.

“இயேசுவே, உமது வெற்றிகரமான வருகையின் ஆனந்தபாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக நான் உமக்கு நன்றி சொல்கிறேன். இப்போது நான் சங்கீதம் 139ல் கூறப்பட்டுள்ளதை ஜெபமாக ஏறெடுக்கிறேன்:

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
(சங்கீதம் 139:23-24)

நிந்தனை உன்னை மேற்கொள்ள அனுமதிக்காதே! நீ நிந்திக்கப்படுவதை இயேசு அனுமதிப்பதில்லை. மாறாக, கிறிஸ்து இயேசுவில் இருப்பவர்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை என்று வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஏற்றுக்கொள்! துரோகம் பண்ணுதலுக்குப் பதிலாக விசுவாசிப்பதைத் தெரிந்துகொள், தொடர்ந்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பற்றிப் பிடித்துக்கொள்வாயாக!

நீ ஒரு அதிசயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!