புத்தம் புதிய இருதயத்தைப் பெற்றுக்கொள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› புத்தம் புதிய இருதயத்தைப் பெற்றுக்கொள்!

நமது இருதயங்கள் எப்போதும் தூய்மையாக இருப்பதில்லை, உத்தமத்தை நாம் எப்போதும் கடைபிடிப்பதில்லை. சில சமயங்களில், நம் இருதயங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. அவை நாம் விரும்பும் அளவுக்கு அழகாக இருப்பதில்லை. அவை மற்றவரை விமர்சிக்கவும், பிறர் மீது கோபப்படவும், எதிர்மறையான எண்ணங்களை சிந்திக்கவும், ஆத்திரப்படவும் நம்மைத் தூண்டலாம்.

இயேசு இதை ஒருபோதும் அனுபவித்ததில்லை. அவர் பரிபூரணமானவர், அவருடைய இருதயம் எப்போதும் தூய்மையாகவே இருந்து வந்திருக்கிறது. இருப்பினும், நீ தோல்வியடையும்போது, எப்படி உணர்கிறாய் என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.

உன் இருதயத்தை அழகாகவும், சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே ஆவார். அவர், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு….” என்று சொல்லியிருக்கிறார். (பரிசுத்த வேதாகமம், எசேக்கியேல் 36:26)

எனவே, இனிமேலும் நீ காத்திருக்க வேண்டாம், உனக்குள் சுத்த இருதயத்தை உருவாக்கும்படி நீ ஆண்டவரிடம் கேள். சங்கீதம் 51:10ல் “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என்று தாவீது சொல்வதுபோல், நீ ஆண்டவரிடம் கேள். இதுவே தாவீதின் விண்ணப்பமாக இருந்தது, இன்று இது உன்னுடைய விண்ணப்பமாக இருக்கட்டும்.

இந்த விண்ணப்பத்தின் சத்தத்தை இயேசுவிடம் கொண்டுவந்து, அவர் உன்னை மாற்றும்படி அவருக்கு இடங்கொடு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!