புதிதாக ஏதாவது முயற்சிக்க விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› புதிதாக ஏதாவது முயற்சிக்க விரும்புகிறாயா?

பயணங்கள் நாம் திட்டமிட்டதுபோல் எப்போதும் செல்வதில்லை. கடந்த வருடம் நான் என் பேரனுடனும் என் சபையில் உள்ள சில நண்பர்களுடனும் சேர்ந்து இஸ்ரவேலுக்குள் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பயணம் அற்புதமாக இருந்தது, ஆனால் வழியில் சில மேடுபள்ளங்கள் இருந்தன.

ஒரு நாள், எங்கள் சுற்றுப்பயணக் குழு தலைவர், நாங்கள் பெத்லகேமை பார்க்கச் செல்லப்போகிறோம் என்று சொன்னார். ஆஹா! பெத்லகேம். இயேசு பிறந்த இடம். கேட்கும்போது உற்சாகமாக இருக்கிறது அல்லவா?

ஆனால் அதே உற்சாகம் நிலைக்கவில்லை. அந்த நகரத்தில் ஏதோவொரு கலவரம் நடந்து கொண்டிருந்ததால் எங்களால் அங்கே நுழைய முடியவில்லை. ஆகையால், ஒரு குப்பைக் கிடங்கு, அதன் பக்கத்தில் சிறிய சுவர் மற்றும் சில கட்டிடங்களின் மங்கலான காட்சி தெரியும் ஒரு இடத்தில் எங்கள் பேருந்தை நிறுத்தினோம்.

ஒரு பெரிய ஏமாற்றம் போல் தெரிகிறது அல்லவா? ஆனால் உண்மையில் அப்படி இல்லை, ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளிலும் மன திருப்தியை தேடுவதை நான் கற்றுக்கொண்டுள்ளேன். அப்போஸ்தலரான பவுல் நமக்கு பிலிப்பியர் 4:11ல் இப்படி கூறுகிறார்: “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.”

மன நிறைவின் ரகசியம் பல நேரங்களில் நம் அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. உன்னிடம் நேர்மையாக சொல்லவேண்டுமானால், இந்த பயணம் பல போராட்டங்களை கடந்து வரும் பயணமாக இருந்தது. நான் சுற்றுலாக்களுக்கு அதிகம் செல்வது கிடையாது. கூட்டங்களின் பின் செல்வது எனக்கு பிடிக்காது. நான் முற்றிலும் சுதந்திரமானவன், ஆனால் இந்த பயணத்தில் என் மூத்த பேரப்பிள்ளையை கூட்டிகொண்டுவந்தேன். நான் அவனுக்கு செய்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத காரணத்தால் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. அதைச் சரி செய்யவே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தேன். இறுதியில் இந்த பயணம் என் தவறை நான் மேற்கொண்டு எங்கள் நடுவில் இருந்த உறவை குணப்படுத்தி சரிசெய்ய எனக்கு உதவியது.

சுற்றுலா என்பது பொதுவாக எனக்கு விரும்பமில்லாத ஒரு விஷயமாக இருந்தாலும், ஒன்றாக நாங்கள் அதை செய்தோம். ஆனால் எப்படியோ ஒரு வழியாக நாங்கள் ஆழ்ந்த மனநிறைவையும் நெருக்கத்தையும் உணர்ந்தோம். ஒரு உறவை குணமாக்க நீ புதிதாக எதையாவது முயற்சிக்க விரும்புகிறாயா?

அது ஒரு இடத்தைச் சார்ந்த இலக்கு இல்லை மாறாக உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய இலக்கு என்று நான் கண்டுகொண்டேன். இப்படிப்பட்ட இடங்களை உன்னுடைய பயணத்தில் நீ கண்டடைவாய் என்று நான் ஜெபிக்கிறேன்.

நீ ஆசீர்வதிக்கப்பட்டு விரும்பப்படுகிறாய்.

நீ ஒரு அற்புதம்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!