பிசாசின் தந்திரம்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› பிசாசின் தந்திரம்…

உன் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், உன் கணினியைப் பாதுகாப்பது எப்போதும் எளிதானது அல்ல என்பது உனக்குத் தெரிய வரும்! மனித வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைப்போலவே, இந்த வைரஸ்களும் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குப் பரவுகின்றன.

சி.எஸ். லூயிஸ் என்பவரது கூற்றுப்படி : பிசாசின் தந்திர உபாயமே வைரஸ்களை உருவாக்குவதுதான். தேவ ஜனங்களைத் தாக்கி அழிக்கும்படிக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பிசாசு தனது ஆய்வகங்களில் வைரஸ்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறான். அவைகளில் இரண்டை இங்கே காண்போம்:

ஆக்கினைத்தீர்ப்பு எனும் வைரஸ்: பிசாசானவன் தான் ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளானதை அறிந்துகொண்டதால், வேதாகமத்தில் ரோமர் 8:1ம் வசனத்தில் காணப்படும் இந்த வல்லமைவாய்ந்த சத்தியத்தை மறக்கச் செய்வதன் மூலம், மற்றவர்களை ஆக்கினைக்கு உட்படுத்தவும் (தண்டனை, ஒடுக்குதல்) ஆக்கினைக்கு உட்படுத்தும்படி மற்றவர்களைத் தன்வசம் இழுக்கவும் முயல்கிறான்: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.”

குற்றஞ்சாட்டுதல் எனும் வைரஸ்: வேதாகமத்தில், பிசாசானவன் “சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன்” என்று அறியப்படுகிறான். வதந்திகள், புறங்கூறுதல்கள் மற்றும் அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் இந்த வைரஸை பரப்பும் கலையில் அவன் தலைசிறந்தவனாய் இருக்கிறான். பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை கறைபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் அவன் அதைப் பரப்புகிறான்.

இந்த தீங்கிழைக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறந்த வழி என்னவென்றால், நாம் முழுவதுமாக குணமாக்கும் மருந்தால் நிரப்பப்பட்டிக்க வேண்டும்: அதாவது, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்! பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் வைரஸ்களால் பாதிப்புக்குள்ளாவதில்லை; மேலும், அவர் நம் இருதயங்களையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கிறார்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்… “பரிசுத்த ஆவியானவரே, என் மீதான உமது பிரசன்னத்துக்கு நன்றி. நீர் என்னைப் பாதுகாப்பவரும் எனக்கு ஆறுதல் அளிப்பவருமாய் இருக்கிறீர். உமது சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் என்னை நிரப்புவீராக. எல்லாவிதமான ஆக்கினைத்தீர்ப்புகளிலிருந்தும் என்னை விடுவித்து, எல்லாவிதமான குற்றச்சாட்டுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய என் இரட்சகராகிய இயேசுவின் சத்தியத்தை நான் விசுவாசிக்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!