பாதை தெளிவாக இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› பாதை தெளிவாக இருக்கிறது!

இது நீ முன்னேறுவதற்கான நேரம், மறந்துபோன கனவுகளை மீண்டும் வெளிக்கொணர்ந்து, நீ வாழ ஆண்டவர் உனக்கு விதித்துள்ள வாழ்க்கையை வாழ வேண்டிய நேரம் இதுவே!

ஏசாயா புத்தகத்தில், 45-ஆம் அதிகாரத்தில், வசனம் 2-ல் அவர் தம்முடைய வார்த்தையில் அறிவித்துள்ளதைக் கவனி: “நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்”.

ஆண்டவர் உனக்கு முன் செல்கிறார். தடைகளை நீக்கி கோணலானவைகளை நேராக்குகிறார். அவர் பாதையைத் தெளிவுபடுத்துகிறார்! நீ வெற்றிபெற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.
அவர் உன்னை வெற்றிசிறக்கப்பண்ணுகிறார், மற்றும் அவருடைய ஞானத்தையும் விவேகத்தையும் உனக்குத் தருகிறார்.

ஆண்டவருடன் கூட ஜெயங்கொள்ளும் வாழ்வில் பிரவேசி!

என்னுடன் ஜெபி: “ஆண்டவரே, நான் உமது வார்த்தையை நம்புகிறேன், நீர் எனக்கு முன்பாகச் செல்கிறீர், கோணலான இடங்களை நேராக்குவீராக. உமது விவேகம் எனக்கு இருக்கிறது… கிறிஸ்துவின் சிந்தை என்னிடம் உள்ளது… நீர் எனக்காகத் தெளிவுபடுத்திய பாதையில் நான் முன்னேறிச் செல்கிறேன்! உம் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!