பள்ளத்தாக்குகள் யாவும் நிரப்பப்படும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› பள்ளத்தாக்குகள் யாவும் நிரப்பப்படும்

இந்த நாள் ஒரு அதிசயம் நடக்கக்கூடிய நாள்! ஆண்டவருடைய அற்புதமான செயல்களுக்காக நாம் ஒன்றாகக் காத்திருக்கும் இவ்வேளையில் நீ எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறாய் என்று நம்புகிறேன் மற்றும் ஜெபிக்கிறேன். ஆண்டவருடைய கிரியைகளை நாம் எவ்வளவாக எதிர்பார்க்கிறோம் என்பதை ஒரு கணம் நாம் அவரிடம் எடுத்து கூறலாமா?

“இயேசுவே, இன்று நீர் எங்களுக்காக வைத்திருக்கும் நன்மையைக் காண மிகுந்த ஆவலோடு இருக்கிறோம். எங்களைச் சுற்றிலும் அற்புதங்கள் நடக்கின்றன, அவற்றைப் பார்க்கும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். வரவிருக்கும் தருணங்களில் உமது வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதை நாங்கள் காணும்படி, ​​உமது தெளிந்தபுத்தியையும், உமது ஞானத்தையும் எங்களுக்கு நீர் அருள வேண்டும் என்று ஜெபிக்கிறோம். உமது வாக்குத்தத்தங்களுக்காக நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆமென்.”

நீ எப்போதாவது வழிதவறிச் சென்று தொலைந்துபோயிருக்கிறாயா? நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோடை காலத்தில், மலைப்பகுதி ஒன்றில் மரங்களை நட்டு என் நாட்களைக் கழித்தேன். ஒரு நாள், வழி தவறிச் சென்றுவிட்டேன். கரடுமுரடான நிலத்தில் இங்குமங்குமாக நடந்து ஜெபம் செய்துகொண்டு, நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு அடையாளத்தையோ அல்லது சில வகையான குறிப்புப் புள்ளியையோ தேடிக்கொண்டிருந்தேன். பின்னர், திடீரென்று, நான் ஒரு நேர்த்தியான சாலைக்கு கடந்து வந்தேன், நான் இதை ஒரு அதிசயம் என்றுதான் நம்புகிறேன். சாலை தெளிவாகவும், நேராகவும், நன்கு பயணித்த ஒரு பாதையாகவும் இருந்ததாக எனக்கு நன்கு நினைவிருக்கிறது! அந்தச் சாலையின் ஒரு மூலையில் என் சக ஊழியர்கள் நின்றுகொண்டிருந்தனர். நான் எதையும் அவர்களிடம் சொல்லவில்லை, ஏனென்றால் நான் அவர்கள் மத்தியில் வெட்கப்பட்டுப்போவதை விரும்பவில்லை.

காட்டில் தொலைந்துபோனது ஒரு இனிமையான அனுபவம் அல்ல, ஆனால் நான் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நீ சென்றடைய வேண்டிய இடத்திற்கும் செல்லும் வழியைக் காண தேவன் எப்போதும் உனக்கு உதவுவார். இது எனக்குப் பிடித்த வாக்குத்தத்தங்களில் ஒன்றாகும்:

“பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும்.” (லூக்கா 3:4)

ஆண்டவர் சேரவேண்டிய இடத்திற்கு செல்லும் ஒரு வழியை காண்பிப்பதாக மட்டும் வாக்குப்பண்ணவில்லை, மாறாக, அவர் வழியை செவ்வைப்படுத்தி சமமாக்குவார் என்றும் வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார். நீ எவ்வளவு அதிக தூரம் சென்று தொலைந்து போனதாக உணர்ந்தாலும் சரி, பாதை எவ்வளவு கரடு முரடாகத் தோன்றினாலும், இயேசுவின் சமூகத்துக்கு முன்பாக பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்று ஆண்டவர் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் இயேசுவே நமது உண்மையான திசை காட்டியாக இருக்கிறார். அவர் நம் பாதையை ஒளிரச் செய்வார் என்று நாம் அவரை நம்பலாம். சங்கீதம் 119ல் உள்ள வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்:

“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105)

மேலும் தாவீது எடுக்கும் தீர்மானத்தின் வசனத்தையும் இங்கே காணலாம்.

“உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.” (சங்கீதம் 119:106)

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களின் வெளிச்சத்தில், இன்று உனக்காக அவர் வைத்திருக்கும் பாதையில் நடக்க ஆண்டவருடன் ஒரு உடன்படிக்கை செய்ய நேரம் ஒதுக்கு, மேலும் அவர் உனக்காக வைத்திருக்கும் அனைத்து அற்புதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி ஆவலாய் இரு.

அப்படித்தான் நீ ஒரு அதிசயமாய் இருக்கிறாய்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!