பரிசுத்த ஆவியானவர் உங்களை மறுரூபப்படுத்த விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› பரிசுத்த ஆவியானவர் உங்களை மறுரூபப்படுத்த விரும்புகிறார்!

பரிசுத்த ஆவியானவர் உன்னை மறுரூபப்படுத்த விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12: 2)

“மறுரூபம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “மெட்டாமோர்போ” என்பதாகும், இது “மெட்டாமோர்போசிஸ்” (metamorphosis) என்ற ஆங்கில வார்த்தையின் மூலப் பதமாகும். சகோதரனே/சகோதரியே, பரிசுத்த ஆவியானவர் உன்னை “மறுரூபப்படுத்த” விரும்புகிறார்… வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன்னை வல்லமையாய் உருமாற்ற விரும்புகிறார்!

நீ ஆண்டவருடைய வார்த்தையைத் தியானிக்கும்போது, ​​உதாரணமாக, “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த செய்தியின் வழியாக, நீ ஜெபம் செய்யும் போது, ​​நீ ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் போது, ​​பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்க்கையில் கிரியை செய்து உன்மீது அசைவாடத் துவங்குவார்.

உங்கள் மனதைப் புதுப்பிக்க நீங்கள் அவரை அனுமதித்தால், நீங்கள் அசாதாரணமான காரியங்களைப் பார்த்து அனுபவித்து ஆச்சரியப்படுவீர்கள்!

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான லாஸ் வேகாஸில் (Las Vegas) உள்ள சர்வதேச தேவாலயத்தின் போதகர் பால் கோலெட் கூறுகிறார், “பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார், உங்கள் மனம் உங்கள் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் உணர்ச்சிகள் நீங்கள் தேர்வு செய்யும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், நீங்கள் தேர்வு செய்யும் விதம் உங்கள் செயலில் தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் செயல்கள் உங்கள் விதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.” இவை அனைத்தும் தேவனுடைய ஆவியிலிருந்து தொடங்குகிறது! வேதாகமத்தில் கூட, ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் நாம் இதைப் பார்க்க முடியும்.

சகோதரனே/சகோதரியே, இன்று பரிசுத்த ஆவியானவர் உன் மனதைத் தொடும்படி அவரிடம் கேள். அவர் உன்னிடம் பேச வேண்டும் என்று கேள். அவர் உன்னை முழுவதுமாக மறுரூபப்படுத்துவார்… உன்னை முற்றிலும் “மாற்றமடையசெய்வார்”!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!