பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட உன்னை நீ அனுமதிப்பாயானால் எப்படி இருக்கும்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட உன்னை நீ அனுமதிப்பாயானால் எப்படி இருக்கும்?

நீ கேட்கக்கூடிய அனைத்து குரல்களிலும், பரிசுத்த ஆவியானவரின் குரலானது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத அளவிற்கு, அவ்வளவு இனிமையானதும் வலிமையானதுமாக இருக்கிறது, மற்றும் மிகவும் உன்னதமானதும் மிகவும் ஆழமான அர்த்தமுள்ளதுமாய் இருக்கிறது.

தேவனுடைய ஆவியானவர் உன்னிடம் பேசும்போது, அது உனக்கு இருக்கும் எல்லாவற்றையும், நீ அறிந்த அனைத்தையும் கடந்து நிற்பதாய் இருக்கிறது.

கர்த்தருடைய சத்தம் மற்ற எல்லா சத்தங்களையும் விட மிகவும் அன்பானதாக இருக்கிறது, மற்றும் அவருடைய வழிகள் மிகவும் ஞானமுள்ளவைகள்.

இயேசுவுக்குச் செவிகொடுப்பதே மிகச்சிறந்த வழி மற்றும் மிகச்சிறந்த தீர்மானமாகும்.

பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் பேசுகிறார். அவர் தினமும் உன்னிடம் பேசுகிறார்:

  • கனவுகள் மூலம் பேசுகிறார்
  • தினமும் வேத வாசிப்பின் மூலம் பேசுகிறார்
  • பிரசங்கங்கள் மற்றும் போதனைகள் மூலம் பேசுகிறார்
  • நண்பர்கள் மூலமாக பேசுகிறார்

நீ பரிசுத்த ஆவியானவருக்குச் செவிசாய்க்கும்போது, ​​உன்னதமான தேவனுடைய ஞானம், ஆலோசனை மற்றும் அறிவுரைகளை நீ பெறுகையில், உன் மனுஷீக வரம்புகள் சுக்குநூறாக உடைக்கப்படுகிறது, அப்போதுதான் அதிசயம் நடக்கிறது!

உன்னை நேசிப்பவரும், உன் பிறப்பைப் பார்த்தவரும், நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மற்றும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறவருமான, இவருடைய இனிமையான குரலுக்கு நீ செவிசாய்த்துக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனது ஜெபமும் அழைப்புமாகும்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கவும்: “பிதாவே, நான் இப்போதும் என் ஆத்துமாவை அமைதிப்படுத்தி, உமது பரலோகக் குரலைக் கேட்கிறேன். இது நான் முன்னெப்போதும் கேட்டிராத மிக இனிமையானதும் ஆழமானதுமான சத்தமாக இருக்கிறது. நீர் என்னிடம் பேசியதற்கு நன்றி… நான் உம்மை நேசிக்கிறேன். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!