பரலோகம் உனக்குச் செவிகொடுக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› பரலோகம் உனக்குச் செவிகொடுக்கிறது!

காலம் நிலையாக நிற்கும் இடமும், மலைகள் தலை வணங்கி நிற்கும் இடமுமான ஒரு இடம் இங்கே இருக்கிறது.

வெளிச்சத்தால் நிறைந்ததும், சமாதானம் நிரம்பி வழிவதுமான இடமாகிய… பரலோகம் வெகு தொலைவில் இல்லை. அது மிக அருகில் இருக்கிறது… ஜெபத்தில் எட்டிப் பிடிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது!

கர்த்தாதி கர்த்தர் உனக்குச் செவிகொடுக்கிறார். அவர் உன் கண்ணீரைக் காண்கிறார், அவற்றைத் தம்முடைய துருத்தியில் வைத்துக்கொள்கிறார். (வேதாகமத்தில் சங்கீதம் 56:8 ஐ வாசிக்கவும்)

அவர் உன் வேண்டுதல்களைக் கேட்டு, அவைகளுக்குப் பதிலளிக்கிறார். உன்னைப் பாதுகாப்பவர் உன் கூப்பிடுதலுக்குச் செவிகொடாதவர் அல்ல:

  • உன் மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக, தேவன் உனக்காக எழுந்தருளுகிறார் (சங்கீதம் 27:2 ஐ வாசிக்கவும்)
  • உன் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கடலின் மத்தியில், பரலோகத்தின் தேவன் தம்முடைய கரத்தை நீட்டி உன்னைத் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கிவிடுகிறார் (2 சாமுவேல் 22:17 ஐ வாசிக்கவும்)
  • உன் பயத்தின் மத்தியில், அவர் உன்னை விடுதலைப் பாடல்களால் சூழ்ந்திருக்கிறார் (சங்கீதம் 32:7 ஐ வாசிக்கவும்)
  • உன் எதிரிகளின் மத்தியில், அவர் கேடயத்தையும் பரிசையையும் பிடித்து நிற்கிறார் (சங்கீதம் 35:2 ஐ வாசிக்கவும்)

அவர் உன் கன்மலையும், உன் கோட்டையுமாக இருப்பதால், நீ அமைதியாக இருக்கிறாய்… நீ நிலையாய் இருக்கிறாய்.

உன் ஒவ்வொரு அடியையும் அவர் உறுதிப்படுத்துவதால், நீ சமாதானத்துடன் இருக்கிறாய்.

பிதாவானவர் உன் அருகில் இருப்பதால், நீ பயமில்லாதிருக்கிறாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!