பரலோகத்திலிருந்து வரும் பாடலைக் கேள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› பரலோகத்திலிருந்து வரும் பாடலைக் கேள்

“ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்!’’ (வேதாகமத்தில் ஏசாயா 6:3ஐப் பார்க்கவும்)

இன்று, உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளும்படிக்கு, நீ செய்தித்தாளை வாசிப்பாய் அல்லது செய்தி அறிவிக்கப்படும் சேனலைப் பார்ப்பாய். இந்த ஊடக வாயில்கள், பேரழிவுகள், மரணங்களானது, யுத்தங்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தவறாமல் நமக்கு அறிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும், மனச்சோர்வை உண்டாக்குகிறதும், நம்பிக்கையை இழந்துபோகச் செய்கிறதுமான தகவல்களும் செய்திகளும் உன் செவிகளை வந்தடைகின்றன.

ஆனாலும், நீ ஒரு விசேஷித்த சத்தத்தைக் கேட்கும்படி, குறிப்பாக… பரலோகத்தின் ஒலியைக் கேட்கும்படி சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். ஒரு குரலைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்… அது பரிசுத்த ஆவியானவரின் குரல்தான். ஒரு இருதயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்… அது பிதாவின் இருதயம்தான்!

உன்னைச் சுற்றியுள்ள இந்த அனைத்து சத்தங்களுக்கும் மத்தியில், ஆண்டவருடைய குரலை வேறுபடுத்தி அறிய உன் செவிக்கு உன்னால் பயிற்சி அளிக்க முடியும். அவ்வாறு செய்வதற்கான சில வழிமுறைகளை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்!

  • அவருடைய வார்த்தையை வாசித்தல்
  • ஜெபித்தல்
  • அவரது துதியைப் பாடுதல்
  • அவரை ஆராதித்தல்
  • அமைதியாக காத்திருத்தல்

அவர் உன் இருதயத்தில் வைத்திருக்கிற இனிமையானதும், பரத்திலிருந்து பெற்றுக்கொண்டதுமான உன்னை ஊக்கப்படுத்தும் காரியங்களைப் பற்றி தியானித்தல்.

நீ அவருடைய சத்தத்திற்கு கவனமாய் இருப்பதால், இந்தப் பூமியில் ஒரு வித்தியாசமான சத்தத்தை நீ கொண்டுவரப் போகிறாய்… அது பரலோகத்தின் சத்தம். நம் உலகத்திற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!