பயப்படாதே…

முகப்பு ›› அற்புதங்கள் ›› பயப்படாதே…

இன்று, சங்கீதம் 27-ன் தொடரைத் தொடங்குகிறோம். இது தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதைப் பற்றி அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் நான் அனுப்பும் மின்னஞ்சல்களைத் தவறவிடாதே… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (வேதாகமம், சங்கீதம் 27:1)

நீ எப்போதாவது இருளைக் கண்டு பயந்திருக்கிறாயா? உன் இருதயத்தில் பயத்தைத் தூண்டும் ஒரு இருண்ட சூழ்நிலையில் நீ இன்று இருக்கிறாயா? தேவன் ஒளியாயிருக்கிறார் – அவரே உன் ஒளி. நீ பயப்பட வேண்டாம். வேதாகமத்தில் சங்கீதம் 118:6ல், “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கர்த்தர் உன் வாழ்வின் அடைக்கலமாய் இருக்கிறார். இந்த அடைக்கலம் தாக்கப்படலாம் ஆனால் அது உறுதியாக நிற்கும். வேதாகமத்தில் சங்கீதம் 46:1-3ல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்… நாம் பயப்படோம்” என்று மறுபடியும் எழுதப்பட்டிருக்கிறது.

பயப்பட வேண்டாம். இன்று இயேசு உன்னிடம் கூறுகிறார், “நான்தான், பயப்படாதிருங்கள்.” (வேதாகமம், யோவான் 6:20)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!