பயப்படாதே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நான் … பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)
இன்று, கர்த்தர் உன் கவலையை விட்டுவிடுமாறு சொல்கிறார்.
உனக்கு உதவி செய்து, உன்னைத் தூக்கி நிறுத்துவதாக உறுதியளிக்கிறார்.
அவர் உன் கூட இருக்கிறார்!
உன்னிடத்தில் பேசி, உனக்கு சொல்கிறார், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்”(வேதாகமத்தில் ஏசாயா 41:10ஐ பார்க்கவும்)
நீ ஜெபிக்கும்போது, “பயப்படாதே!” என்று சொல்வதற்காக தேவன் உன் அருகில் வருகிறார்.
“நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.” வேதாகமத்தில், புலம்பல் 3:57ஐ பார்க்கவும்)
என்னோடு சேர்ந்து இதை அறிக்கையிடு: “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (வேதாகமத்தில் சங்கீதம் 118:6ஐ பார்க்கவும்)
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ‘அனுதினமும் ஒரு அதிசயத்தில்’ இரண்டு மாதங்களுக்கு முன்பாக இணைந்தேன். மனம் தளர்ந்துபோய், பயத்தினால் நம்பிக்கையற்று துக்கத்தில் மூழ்கிக்கொண்டிருந்தேன். இயேசுவை எனது இரட்சகராகவும், கர்த்தராகவும் அறிவேன். ஆனால் மிகுந்த சோதனைகள் மற்றும் பெரும் பொறுப்புகள் நிமித்தம் மிகவும் நெருக்கப்பட்டேன். கடந்த மூன்று வருடங்களாக என்னுடைய வயது முதிர்ந்த தாயாரையும் அவரது காரியங்களையும் நான் பொறுப்பெடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது கடைசி மகளுக்கும் வீட்டிலேயே படிப்பு சொல்லித் தருகிறேன். எனது மூத்த மகள் வேலை பார்த்துக் கொண்டு கொஞ்ச நாள் எங்களோடு இருந்தாள். அவளுடைய இரண்டு பிள்ளைகளை வீட்டில் வைத்து வளர்த்தேன். அவள் வெளியே சென்ற பிறகு, தகப்பனற்ற இரண்டு பிள்ளைகளையும் வீட்டிலே வளர்க்கிறேன்.
நான் உங்களது தின தியானங்களை வாசிக்கையில், என்னுடைய சோர்ந்துபோன ஆத்துமாவுக்குள் மீண்டும் வாழ்வெனும் தென்றல் வீசியதுபோல உணர்ந்தேன். “நீ இருப்பதற்காய் நன்றி” என்னும் வார்த்தைகள் எனக்கு உந்து சக்தியாய் இருந்தது. இந்த தியானங்கள் நான் தேவனையே நோக்கிப் பார்க்க உதவிற்று. இவ்வூழியத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக!
இயேசுவின் அன்பில் வாழ்த்துகிறேன்.” (ஜூலி, ஊத்துக்குளி).