நீ வேறு எதையும் செய்யத் தேவையில்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ வேறு எதையும் செய்யத் தேவையில்லை!

இயேசு நிலைநாட்ட வந்த புதிய உடன்படிக்கையானது உண்மையிலேயே மிகவும் மகிமை பொருந்தியது!

ஆனால், நண்பனே/தோழியே, பழைய ஏற்பாட்டில் ஆண்டவரிடம் நெருங்கி வருவதற்கு மனுஷர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது என்பதை ஒருவேளை நீ ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும்.

“(நீ) பொய் சொல்லாதிருப்பாயாக, என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் (என்னையன்றி வேறே தேவர்களை ‘நீ’ கொண்டிருக்க வேண்டாம்), (நீ) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, (நீ) இச்சியாதிருப்பாயாக” என்பன போன்ற நிறைய எதிர்பார்ப்புகளை ஆண்டவர் பழைய ஏற்பாட்டு ஜனங்கள் மீது வைத்திருந்தார். ஆனால் அதை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

“நீ” என்ற இந்த சிறிய, ஓரெழுத்து வார்த்தையானது நமது தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு பொதியைப் போல பாரமாக இருக்கிறது…

ஆனால் புதிய உடன்படிக்கையின் மூலமாக, இயேசு எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார்!

எல்லா பாரமும் மனிதர்கள் மீது வைக்கப்பட்டதைக் குறிக்கும் “நீ” என்ற வார்த்தையிலிருந்து, தம்மைக் குறிக்கும், “நான்” என்ற வார்த்தைக்கு ஆண்டவர் கடந்து செல்கிறார், இயேசுவைக் குறிக்கும் “நான்” என்ற வார்த்தையானது அவருடைய அர்ப்பணிப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது… “அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (வேதாகமத்தில் எபிரேயர் 8:10 – 12ஐப் பார்க்கவும்)

இப்போது கவனம் மாறியிருக்கிறது… முன்பிருந்ததைப்போல, இப்போது பொறுப்பிற்கான பாரம் நம்மீது வைக்கப்படவில்லை. இந்த உடன்படிக்கை நிலைநாட்டப்படும்படிக்கு, சிலுவையில் சகலத்தையும் நிறைவேற்றிய ஆண்டவர் மீதும் இயேசுவின் மீதும் எல்லா பாரமும் வைக்கப்பட்டுள்ளது.

என்னுடன் சேர்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்துவதற்கு இது உன்னை ஊக்கப்படுத்துகிறதா? சகலமும் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது!

“சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.” (வேதாகமம் ரோமர் 11:36)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!