நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!

விடுதலை!

எதிரிகளைத் தோற்கடித்து தங்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கோஷம்தான் இது…

விடுதலை!

வெள்ளிக் கிழமை மாலை வெளியே செல்வதற்கு இளம் வாலிபப் பிராயத்தில் உள்ள உன் மகனுக்கு/மகளுக்கு நீ அனுமதி அளித்தால், அது அவர்களின் மகிழ்ச்சியின் தொனியாக இருக்கும்!

நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமது உள்ளத்தின் ஆழத்தில், நாம் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்.

  • மற்றவர்களின் விமர்சனங்களிலிருந்து விடுபட விரும்புகிறோம்,
  • அடிமைத்தனத்திலிருந்து விடுபட விரும்புகிறோம்,
  • நம் ஆத்துமாக்களை சிறைப்படுத்தும் காரியங்களிலிருந்து விடுபட விரும்புகிறோம்,
  • நாம் எதைச் செய்ய அழைக்கப்பட்டோமோ அதை விடுதலையோடு செய்ய விரும்புகிறோம்.

எல்லா மனுஷர்களும் இப்படிப்பட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்வது சாதாரணமானதுதான்!

உண்மையிலேயே, விடுதலைக்கான பசியுள்ளவர்களாய் தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். நாம் ஏதோவொரு காரியத்தால் அல்லது யாரோ ஒரு நபரால் சிறைப்படுத்தப்பட்டு கட்டுண்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, நாம் விடுதலையோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் நம்மை சிருஷ்டித்திருக்கிறார்!

நம்மில் அநேகருக்குக் கைகளிலோ அல்லது கால்களிலோ சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கவில்லை, ஆனால் பெரும்பாலும் நம் இருதயத்திலோ அல்லது எண்ணங்களிலோ சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த சங்கிலிகளிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடியவர் இயேசு ஒருவரே!

“ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (வேதாகமத்தில் பிலிப்பியர் 2:9ஐப் பார்க்கவும்)

ஆகவே, உன்னைச் சிறைப்படுத்துகிறதும் கட்டுகளில் வைப்பதுமான அனைத்தும் இயேசுவின் நாமத்தில், இப்போதே அழிக்கப்பட்டுவிட்டன!

நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்! நீ இயேசுவில் மெய்யாகவே விடுவிக்கப்பட்டிருக்கிறாய்! (வேதாகமத்தில் யோவான் 8:36 ஐப் பார்க்கவும்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!