நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்”(வேதாகமத்தில் லூக்கா 4:18-19ஐப் பார்க்கவும்)

உன் கண்களை ஏறெடுத்துப் பார்… ஒரு புதிய நாள் உதயமாகிறது. இது உனக்கு வாக்குத்தத்தங்களும் நம்பிக்கையும் நிறைந்த நாளாக இருக்கிறது. உன் வாழ்வில் காலைதோறும் கர்த்தருடைய கிருபை புதிதாய் இருக்கிறது…

நீ விடுவிக்கப்படும்படி இயேசு உனக்காக மரித்தார். உன் கட்டுகள் அறுந்துபோகும் வகையில் அவர் கட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, குத்தப்பட்டார். இது ஒரு நித்திய மறைபொருளும் சத்தியமுமாகும். இயேசுவின் பலி மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்… அவருடன் நடக்கவும், அவரைக் குறித்து மற்றவர்களிடம் எடுத்துரைக்கவும், உன் வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்றவும் நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!

  • இந்தப் பூமியில் உள்ள எதுவும் உன்னைத் தடுத்து நிறுத்தவோ அல்லது கீழே விழச்செய்யவோ முடியாது, ஏனென்றால் நீ ராஜாதி ராஜாவாலும், கர்த்தாதி கர்த்தராலும் மீட்கப்பட்டிருக்கிறாய்.
  • நீ அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறவருடைய கரங்களில் இருக்கிறாய். விடுதலைப் பாடல்களாலும் அன்பின் மெல்லிசைகளாலும் அவர் உன்னைச் சூழ்ந்திருக்கிறார்.
  • உயிர்த்தெழுந்த இரட்சகர் உன் சூழ்நிலைகளுக்கு மேலாக உன்னை உயர எழும்பச்செய்வதற்கு உனக்கு செட்டைகளைத் தருகிறார்.
  • இனியும் உன் கடந்த காலத்திற்கோ அல்லது உன் பயங்களுக்கோ நீ அடிமையாக இருக்க முடியாது.
    நீ கிறிஸ்து இயேசுவில் மிகவும் வல்லமைவாய்ந்த ஒரு நபராய் இருக்கிறாய்!

பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது, நடக்க வேண்டிய வழியானது தெளிவாகத் தெரிகிறது… நீ உண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருக்கிறாய் (வேதாகமத்தில் யோவான் 8:36 ஐப் பார்க்கவும்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!