நீ முதலில் எதைத் தேடுகிறாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ முதலில் எதைத் தேடுகிறாய்?

இந்த வேத வசனம் உனக்குத் தெரியுமா? இது உள்ளத்தைத் தொடக்கூடிய வசனங்களில் ஒன்று.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33)

கேள்வி என்னவென்றால்… இந்த வசனம் ஏன் இவ்வளவு வல்லமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

ஏனென்றால், சில சமயங்களில் நம் இதயத்தில் நாம், “பணம் சம்பாதிப்பது மிக முக்கியமான விஷயம்” அல்லது “வாடகையை செலுத்த வேண்டும்… எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆடைகளை வாங்க எனக்கு அதிக பணம் தேவைப்படுகிறது” என்று நினைக்கிறோம். ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்திற்கும் இந்த வசனம் முற்றிலும் எதிரானதாக இருக்கிறது.

ஆகவே, நம்முடைய முதல் கவலை ஆண்டவருடைய ராஜ்யத்தைத் தேட வேண்டும் என்பதைப் பற்றியதாக இல்லாமல், நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதை ஆராய்வதாகத்தான் இருக்கிறது… நம் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு சொல்லும்போது, நமது பரலோகப் பிதா அதைக் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் அவரோடு நெருங்கி ஜீவிப்பதே நமது பங்கு என்பதையும் அவர் அன்புடன் நமக்கு நினைவூட்டுகிறார்.

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவது என்பது ஆண்டவருடனான உன் உறவை முதன்மைப்படுத்துவதாகும்.

விசுவாசி. நீயும் நானும், ஆண்டவரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அனைத்தும் நம்மைவிட்டு விலகிவிடும் என்று நம்புவோம்.

புரட்சியாளராக இருக்கவோ அல்லது வித்தியாசமாக சிந்திக்கவோ அஞ்ச வேண்டாம்! உன் முன்னுரிமையும் உன் முழுமுதற் கவலையும் நீ ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்வாய் என்பதாக இருக்கக் கூடாது, மாறாக ஆண்டவருடனான உன் உறவை எப்படி மேம்படுத்துவது என்பதாக இருக்க வேண்டும்… குறிப்பாக, ஆரம்பத்தில் கொண்டிருந்ததைப்போல, அது ஜீவனுள்ளதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்! அப்பொழுது வேத வசனம் சொல்வதுபோல், மற்றவைகள் அனைத்தும் கூட கொடுக்கப்படும்.

“… அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33)

என்னோடு சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “பிதாவே, முதலாவது உமது ராஜ்யத்தை தேடுவதே மிக முக்கியமானது என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி. உமது ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுப்பதை நான் தெரிந்துகொள்கிறேன்… என் நாட்களில் முதலிடம், என் உறவுகளில் முதலிடம், என் பொருளாதாரத்தில் முதலிடம் அளிக்க நான் தீர்மானிக்கிறேன். ஏனென்றால், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும் என்று நீர் சொன்னதை நான் நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஏற்ற நேரத்தில் பேசும், உங்கள் தின தியானத்தை வாசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! நான் மனச்சோர்வடைந்திருக்கும்போதும், அல்லது எதையாவது எண்ணி கவலைப்படும் நாட்களிலெல்லாம், உங்களது தின தியான செய்தியானது என் ஆவியைத் தட்டி எழுப்பி என்னை ஆண்டவரிடத்திற்கு நேராக வழிநடத்துகிறது. உங்களது தின தியான செய்திகளையும் வீடியோக்களையும் என் நண்பர்களிடம் நான் பகிர்ந்துகொள்கிறேன்! நன்றி!” (பால், மதுரை)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!