நீ மிகப் பெரிய தவறுகளைச் செய்ததுண்டா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இத்தனை வருட ஊழிய அனுபவம் இருந்தாலும் கூட, நான் இன்னும் சில தவறுகளைச் செய்கிறேன், சில சமயங்களில் அதற்கு ஈடுகட்ட வேண்டிய விலைக்கிரயம் மிகவும் அதிகமானதாய் இருக்கிறது. தவறு செய்தல் என்பது மனித சுபாவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, அப்படித்தானே, நண்பனே/தோழியே?
இப்படி, “தவறு செய்த” நேரங்களில் கூட, இயேசு தொடர்ந்து என்னை நேசிக்கிறார் என்பதை நான் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன், அவர் தொடர்ந்து நம்மை நேசிக்கிறார்…
- ஆம், நீ தொடர்ந்து மூன்று நாட்களாக ஜெபிக்க “மறந்துவிட்டாய்” என்றாலும் கூட, இயேசு உன்னைத் தொடர்ந்து நேசித்துக்கொண்டிருக்கிறார்.
- நீ அநியாயமாகக் கோபப்பட்டு, உன் சிறு பிள்ளையிடம் கத்தினாலும் கூட, இயேசு உன்னைத் தொடர்ந்து நேசித்துக்கொண்டிருக்கிறார்.
- அந்த சிகரெட்டால் உனக்கு எந்த நன்மையும் இல்லை என்று தெரிந்த பின்பும், நீ அந்த சிகரெட்டைப் பற்றவைக்கும்போது கூட, இயேசு உன்னைத் தொடர்ந்து நேசித்துக்கொண்டிருக்கிறார்.
- நீ செய்யும் தொழிலில் புத்தியின்றி, கவனக்குறைவாக தவறுசெய்திருந்தால், அப்போதும் கூட, இயேசு உன்னைத் தொடர்ந்து நேசித்துக்கொண்டிருக்கிறார்.
நீ எல்லாவற்றையும் தவறாகச் செய்துவிட்டாலும், இயேசு உன்னைத் தொடர்ந்து நேசிக்கிறார். இப்படி சொல்வதால் ஆண்டவர் உன் தவறுகளையும் நேசிக்கிறார் என்று அர்த்தமில்லை.
நீ என்ன செய்தாலும் சரி, அவர் “உன்னை நேசிப்பதை” நிறுத்தமாட்டார்.
ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் அவரால் வேறுவிதமாக செயல்பட முடியாது; உன்னை நேசிக்காமல் அவரால் இருக்க முடியாது! நீ ஆண்டவருடைய பிள்ளையாய் இருக்கிறாய், ஆம், அவருடைய பிள்ளையாய் இருக்கிறாய். அவருடைய மிகவும் மதிப்புமிக்க, அழகான ஒரு சிருஷ்டியாய் நீ இருக்கிறாய். நீ தேவ குமாரனின் இரத்தத்திற்கு தகுதியான பிள்ளையாய் இருக்கிறாய்.
ஆம், நீ அவருடைய பிள்ளை. ஆகவேதான் ஆண்டவர் இன்றும் உன்னை தொடர்ந்து நேசித்து வருகிறார், அவர் இதேபோன்று எப்போதும் உன்னைத் தொடர்ந்து நேசிப்பார்.
“பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.” (வேதாகமத்தில் எரேமியா 31:3ஐ வாசித்துப் பார்க்கவும்)
