நீ மன அழுத்தத்தில் இருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ மன அழுத்தத்தில் இருக்கிறாயா?

ஒரு வாசகர் தனது கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்: “என்னால் என் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை – வேறு வார்த்தைகளில் சொன்னால், நான் ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது, எனக்குள் அழுத்தம் ஏற்படுகிறது, இது சில நேரங்களில் என்னைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கிறது.”

விருப்பத்திற்கு மாறாக, இந்த கருத்து ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஒரு வீட்டை நிர்வகிப்பது அல்லது முக்கியமான அலுவலக பொறுப்புகளை நிறைவேற்றுவது மற்றும் ஆண்டவரை சேவிப்பதற்கான அழுத்தமும் கூட நமக்கு மன உளைச்சல் உண்டாக்கி தத்தளிக்க வைக்கலாம்.

மன அழுத்தம் நம்மை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் காயப்படுத்துகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது நம்மை காயப்படுத்துகிறது, எப்படியென்றால் நம் வாழ்வில் இருக்கும் வெளிப்புற அழுத்தங்கள் நமக்கு உள்ளாக இருக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பாதிக்க அனுமதிக்கிறது.

மன அழுத்தம் ஒரு திருடன், தன்னால் முடிந்த அனைத்தையும் திருடும்! உடல்நலம், சமாதானம், ஓய்வு, உறவுகள், சிரிப்பு – மன அழுத்தம் என்பது இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குக் கொடுத்த திரளான ஜீவனை அனுபவிப்பதைத் தடுக்க எதிரி பயன்படுத்தும் ஒரு கொடிய கருவியாகும்.

உன்னுடைய சூழ்நிலை என்ன? நீ அழுத்தத்தில் இருக்கிறாயா? மன உளைச்சலில் இருக்கிறாயா? நான் உன்னை ஊக்குவிக் விரும்புகிறேன் : நீ மன அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதால், உன்னிடம் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம் இல்லை. நீ ஒரு இயல்பான மனிதர் என்று தான் அர்த்தம்.

இருப்பினும், இன்று உனக்கு சில நல்ல செய்திகள் இங்கே உண்டு : நீ உலகில் உள்ள மற்றவர்களைப்போல் வாழ வேண்டியதில்லை. ஒரு விசுவாசியாக, நீ ஆண்டவரின் வாக்குறுதிகளை நம்பலாம் மற்றும் அவர் உன்னில் அவருடைய அசாதாரண திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்றும் நம்பலாம்!

வேதாகமம் இவ்வாறு அறிக்கையிடுகிறது : “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” (சங்கீதம் 16:11)

ஆண்டவர் உனக்காக நிறைவான வாழ்க்கையை வைத்திருக்கிறார்! ஜீவனும் மகிழ்ச்சியும் அவருடைய பிரசன்னத்தில் காணப்படுகின்றன! ஏன் இப்போதே சிறிது நேரம் ஒதுக்கி தந்தையின் பாதத்தில் செலவிடக்கூடாது? அவருடைய ஆசீர்வாதத்திலும் பிரசன்னதிலும் நிறைந்திரு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!