உன் அன்றாட வாழ்வில் உனக்கு அதிக உற்சாகம் தேவைப்படுகிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் அன்றாட வாழ்வில் உனக்கு அதிக உற்சாகம் தேவைப்படுகிறதா?

உன் தினசரி வாழ்வில் நீ மிகவும் உற்சாகமாய் இருக்க விரும்புகிறாயா?

அப்படியானால் உனக்கு ஒரு தீர்வை சொல்கிறேன். நீ இயேசுவிடம் வா! ஆம் நீ சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறாய், அவரிடத்தில்தான் நீ தேடும் உற்சாகத்தைப் பெற முடியும்.

உற்சாகம் என்ற சொல்லானது கிரேக்க வார்த்தையான “எந்தூசியாஸ்மோஸ் (enthousiasmos)” என்ற பதத்திலிருந்து வருகிறது; இதன் அர்த்தம், தெய்வீகத்தால் ஏவப்படுதல் அல்லது உடைமையாக்கிக்கொள்ளப்படுதல் என்பதாகும். உண்மையில், “என் (en)” மற்றும் “தியோஸ் (theos)” என்னும் வார்த்தைகளுக்கு “தேவனுக்குள்” என்பதே பொருளாகும். எனவே நமக்கு வேண்டிய உற்சாகத்தை கர்த்தருக்குள் மட்டுமே நம்மால் பெற்றுக்கொள்ளமுடியும்!

உன்னை எப்படி ஊக்குவிப்பது, எப்படி மீண்டும் பெலப்படுத்துவது, உன் வாழ்வை எப்படி மீண்டும் உயிரடையச் செய்வது என்பதையெல்லாம் உன்னைப் படைத்த தேவனைத் தவிர வேறு யாரால் நன்கு அறிந்திருக்க முடியும்?

உன் உற்சாகத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள நான் சில யோசனைகளைக் கூறுகிறேன்…

  • கர்த்தருடைய ஜீவனின் வல்லமையை மீண்டும் ஒருமுறை உன் வாழ்வில் பெற்றுக்கொள்ளும்படி கேள்.
  • தேவனோடு பேசு, ஜெபம் பண்ணு.
  • சத்தமாய் வாசிக்கப்படுகிற வேத வசனங்களுக்குச் செவிகொடு..
  • தேவனைத் துதிக்கும் துதி பாடல்களையும், ஆராதனை பாடல்களையும் கேள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உனது உற்சாகத்தின் ஆதாரமாய் இருப்பவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே!

உற்சாகத்தினாலும், தேவனுடைய பிரசன்னத்தினாலும் நிறைந்த ஒரு அற்புதமான நாளாக இந்த நாள் அமைய, நான் உன்னை வாழ்த்துகிறேன்!

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். (பரிசுத்த வேதாகமம், ஏசாயா 40:29)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!